search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனங்கள்"

    • தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
    • 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்து தொடரும் பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இருப்பினும் தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதற்கு அச்சாரமாக பிரான்ஸ் நாட்டு வர்த்தகரிடமிருந்து, 2023ம் ஆண்டுக்கான கோடை காலத்துக்காக 1.75 லட்சம் எண்ணிக்கையில் ஆடை தயாரிப்பு ஆர்டர் திருப்பூருக்கு கிடைத்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு வர்த்தக முகமை நிறுவனம் பிரான்ஸ் வர்த்தகரிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு இந்த ஆர்டரை பெற்று தந்துள்ளது.ஆர்டர் வழங்கிய பிரான்ஸ் வர்த்தகரின் தர ஆய்வு குழுவினரான சில்வின் மார்ட்டின், எலிஸ் பெலாட், லாரா ஆகியோர் திருப்பூர் வந்து பின்னலாடை தயாரிப்பு பணிகள், துணி, ஆடையின் தரத்தை ஆய்வு செய்தனர்.

    இது குறித்து வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதி சசீதரன் கூறியதாவது:-

    வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவாக 2023 ம் ஆண்டு கோடைக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கியுள்ளனர். 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஸ்டைலுக்கும் வெவ்வேறு வண்ணம் என்கிற நிலை மாறி, ஒரு ஸ்டைலில் இரண்டு வண்ணங்களில் ஆடை தயாரிக்க கோருகின்றனர். இதனால் டிசைன்களை உருவாக்கும் செலவினம் குறைகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆடை விலையையும் சற்று உயர்த்தி வழங்குகின்றனர். எத்தகைய சூழலிலும் குழந்தைகளுக்கான ஆடை தேவை குறைவதில்லை என்றனர்.

    • தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இந்த குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப் பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்று கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் சிவகங்கைதொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 43 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    • பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும்வகையில், உலகளாவிய நாட்டு வர்த்தகர்கள் தங்கள் ஷோரூம்களில், மறுசுழற்சி ஆயத்த ஆடை ரகங்கள் விற்பனையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.ஆடை தயாரிப்பில் வீணாகும் கழிவு துணியை மீண்டும் பஞ்சாக மாற்றியும், பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து என பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழக நூற்பாலைகள், கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து ஒசைரி நூல் விலையை உயர்த்தி வந்தன.உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி, வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு போதிய விலை உயர்வு பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மறு சுழற்சி ஆடை தயாரிப்பில் புதிதாக அடியெடுத்துவைத்துள்ளன.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    கட்டிங் வேஸ்ட்ஐ சிதைத்து, பஞ்சாக மாற்றி அதனுடன் 50 சதவீதம் பாலியெஸ்டர் இழை கலந்து ஓ.இ., மில்களில், மறுசுழற்சி நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலில், குளிர் கால ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சாயமேற்றிய துணியே சிதைத்து பஞ்சாக மாற்றப்படுகிறது.அதனால், மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் சாயமேற்றுதல் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மறுசுழற்சி நூலிழை ரகங்கள் விலை குறைவாக உள்ளதால் ஆடை தயாரிப்பு செலவினம் சீராகவே உள்ளது. கடந்தாண்டு நிர்ணயித்த அதே விலைக்கே இந்தாண்டும் ஆடை விலையை நிர்ணயிக்கமுடிவதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதும் எளிதாகிறது.

    குறிப்பிட்ட நிறங்களில் மட்டுமே ஆடை தயாரிக்க முடியும் என்பதுதான் மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.ஆனாலும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மறுசுழற்சி ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்டட் நிறுவனங்கள், மறுசுழற்சி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தரச்சான்று பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    ×