என் மலர்
நீங்கள் தேடியது "இசை கலைஞர்"
- 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது.
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு இசை கலைஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 50 ஆண்டுக்கும் மேலாக அனுபவம் கொண்ட புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாதஸ்வர கலைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை நாதஸ்வர கலைஞர் நியமிக்கப்படவில்லை.
- எந்த வித இசை வாத்தியமும் இன்றி சுவாமி எழுந்தருளல் நடைபெறுவது மற்றும் தீபாராதனை நடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் 418 ஆண்டு களுக்கு பின்னர் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் ஏற்கனவே வேலை பார்த்து வந்த நாதஸ்வர கலைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை நாதஸ்வர கலைஞர் நியமிக்கப்படவில்லை.
இங்கு வேலை பார்த்து வந்த தவில் மேளக்கலைஞர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற பின்னர் தற்காலிகமாக கும்பாபிஷேகம் வரை வேலை பார்த்து வந்தார்.
அவருக்கும் உரிய சம்பளம் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் இவர் வேலைக்கு வருவது இல்லை. திருவட்டார் கோவிலில் காலை, மதியம் மற்றும் இரவில் சுவாமி ஸ்ரீபலி எழுந்தருளும் போதும், தீபாராதனையின் போதும் நாதஸ்வரம், மேளம், பஞ்ச வாத்தியம் இசைக்கப்பட வேண்டும் என்பது தொன்று தொட்டே இருந்த வழக்கம். ஆனால் தற்போது எந்த வித இசை வாத்தியமும் இன்றி சுவாமி எழுந்தருளல் நடைபெறுவது மற்றும் தீபாராதனை நடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அதுபோல் கோவிலில் உள்ள வெள்ளி கருட வாகனம் சேதமடைந்ததை அடுத்து சென்னையைச்சேர்ந்த தனியார் அமைப்பு சுமார் ஒன்றே முக்கால் கிலோ வெள்ளிக்கட்டியை இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு காணிக்கையாக அளித்தது. ஆனால் இதுவரை அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததை அடுத்து கருட வாகனம் சரி செய்யும் வேலை தொடங்கப்படவில்லை.
இது குறித்து கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,"கோவிலில் நாதஸ்வர, தவில் மேள, பஞ்சவாத்திய கலைஞர்கள் நியமிப்பது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் இசைக்கலை ஞர்கள் நியமிப்பார்கள். அதுபோல் கருடவாகனம் சரி செய்வதற்குரிய அர சின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் கருட வாகனம் சரி செய்யும் பணி தொடங்கும்"என்றார்.