search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை கல்லூரி"

    • வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (ஹானஸ்) வேளாண்மை, பி. எஸ்சி (ஹானஸ்) தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 மாதம் 26 குழுக்களாக தங்கி வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சி பெற்றனர். முகாம் நிறைவு விழா கல்லூரி டீன் எம். ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் ஏ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். துணை பேராசிரியர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள், கண்காட்சி பற்றி விளக்கி கூறினார்.

    எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி பேசினார். இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை எஸ். ஆனந்தி நன்றி கூறினார்.

    • அய்யாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
    • மண் மாதிரி எடுத்தல், அதன் பயன்கள் குறித்து மாணவிகள் விளக்கினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து மண் மாதிரி எடுத்தல் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பாரதி உலா பேச்சரங்கம் நடந்தது.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய 9-ம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். இதில் "பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம் நடந்தது.

    திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிச ளித்து சிறப்புரையாற்றி னார். கல்லூரி இயக்குனர் கோபால், உரத்த சிந்தனை சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் சிறப்புரை வழங்கினர்.

    விழாவில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன. மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
    • ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி விளக்கமளித்தார்.

    ஆலங்குளம்:

    கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.

    இதில் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் வழிகாட்டுதலின் படி மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா. கீர்த்தனா. லக்சயா ஆகிேயார் தென்னை மரம் ஏறும் கருவியின் பயன்பாட்டையும், அதன் முக்கியதுவத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதன்மூலம் தென்னைமரம் ஏறும் செலவுகளைக் குறைப்பதோடு, விரைவாகவும் பாதுகாப்பாகவும் மரம் ஏறலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி செயல்பாட்டை விளக்கினார். மேலும் இவர்கள் 2½ மாதம் ஆலங்குளம் வட்டாரத்தில் முகாமிட்டு வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.


    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் சேது குமணன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் சென்னை காவல்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) பேசுகையில், தமிழ்நாட்டின் இரு முக்கிய நிர்வாக பதவிகளான காவல்துறை தலைவர் மற்றும் தலைமை செயலாளர் பதவிகளை வகித்துவரும் இருவருமே விவசாய கல்வி கற்றவர்கள் தான். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது.இந்த உலகம் திறமை வாய்ந்தவர்களுக்காக காத்திருக்கிறது. இந்த கல்லூரி எதிர்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளர வாழ்த்துகிறேன் என்றார்.

    உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை செயலாளர் கவிதாஞ்சலி நன்றி கூறினார்.

    ×