search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பியாட் போட்டி"

    • போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்த நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக கலெக்டர் அமர்குஷ்வாஹா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதியை திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ,ஆம்பூர் வழியாக சென்னை நோக்கி செல்ல, வாணியம்பாடிக்கு கொண்டுவரப்பட்டது.

    அந்த ஒலிம்பியாட் ஜோதியை, வாணியம்பாடி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அங்கு நூதன முறையில் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் நடனம் ஆடியும், குத்தாட்டம் போட்டும் வரவேற்றார்.

    இது அங்கு வந்த பார்வையாளர்களிடமும் பொதுமக்களும் பெருத்த வரவேற்பை உண்டாக்கியது.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர் பிரேமலதா மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணா நுழைவாயில் அருகில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் சரவணன், கிரி, திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×