என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்சார வாகனம்"
- தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார்.
- 'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை கொள்ளையடித்தது'
ஷோரூமிற்கு வெளியே ஓலா [OLA] மின்சார ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.
இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் பாடியது அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
Sagar Singh bought an OLA Electric Scooter.The scooter had some issue or the other every day, and OLA didn't provide any after-sales service. So, Sagar loaded the scooter onto a trolley and protested by singing in front of the scooter showroom. ? pic.twitter.com/NzshT8Kdmc
— Pankaj Parekh (@DhanValue) August 19, 2024
'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது' என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாடியதே மக்களின் சிரிப்பலைக்குக் காரணம் ஆகும். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மின்சார வானங்கள் பழுது பட்டும், திடீரென வெடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.
பீஜிங்:
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.
கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.
ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அரசு அனுமதி பெற்றுத்தான் கிராஃபைட் ஏற்றுமதி இனி நடைபெற முடியும்
- 65 சதவீத கிராஃபைட் சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான 'கிராஃபைட்', தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
"தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை" என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.
அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.
வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகளுக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டது
- சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளருக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
- மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்