என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருத்தம்"
- மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
- மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
பாராளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள்.
இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
- கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
- தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.
சென்னை:
மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-
கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.
- வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
- நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
- நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.
- ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி சட்ட விதிமுறைகளின் படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுகளுக்கான சொத்து வரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
ஆனால் வரி விதிப்பு தாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர், மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்பு தாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகளவில் சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
- 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐ.டி.ஐ) சேர்க்கை பெற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களின், தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியா ளர்கள், தங்களது தேசிய தொழிற்சான்றிதழ்களில் பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், போட்டோ, பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், பின்வரும் அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், நாமக்கல் கீரம்பூர், தட்டாங்குட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தேசிய தொழிற்சான்றி தழ்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
மேலும், இது தொடர்பான விபரங்க ளுக்கு, கொண்டி செட்டிப்பட்டியில் உள்ள, மாவட்ட திறன் பயற்சி அலு வலக உதவி இயக்குனரை அணுகி கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதற்கான முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் -2 தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பாக கல்வியல் கல்வி பட்டய, பட்டப்படிப்பு படித்தவர்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய கால அவகாசம் வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை திருத்த வசதி கடந்த 24-ந்தேதி முதல் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்