search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடுக்க"

    • குளச்சல் நகர அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது.

    குளச்சல்:

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது, நகர முன்னாள் செயலாளர் பஷீர்கோயா, ஆனக்குழி சதீஸ், நகர இணை செயலாளர் செர்பா, முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் ஜெகன், வினோத், துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜில்லட், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா, சிசிலி, தேவிசக்தி, நிர்மலா பேபி, பவுஸ்தீனம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான குளச்சல் மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் ஆகியோரை மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் துரிதமாக மீட்க கேட்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை நியமனம் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கழக 52-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் 65-வது பிறந்த நாளை வருகிற 17-ந்தேதி குளச்சல் அலுவலகத்தில் கொண்டாடுவது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
    • சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொழில் உள்பட முக்கிய நகரங்கள் இடையிலும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவும் முடிந்துள்ளது.

    சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து துைற அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு நாளில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுமுறையில் சென்றவர்களில், மருத்துவ விடுமுறை தவிர மற்ற விடு முறைகள் ரத்து செய்யப்பட்டு, இன்று பணியில் இணைய போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு துணை தாசில்தார் போல் கையெழுத்து போலியாக போட்டு பட்டா தயாரித்து கொடுத்து வந்ததால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் விவகா ரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலி பட்டா தயார் செய்து மக்களை மோசடி செய்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    ×