என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயற்கை வேளாண்மை"
- இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
- பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெய மாலா தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-
மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்றாகும்.
அதிக அளவு ரசாயன பொருட்களை விவசா யத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கிறது.
இயற்கை வேளாண்மை விவசாயத்தில் பயன்படுத்து வதால் மண்வளம் மேம்படுகிறது. எனவே தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர்.
இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
பஞ்சகாவ்யா 300 மிலி கரைசலை 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து இலை வழி தெளி உரமாக, காலை அல்லது மாலை நேரங்களில் அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்க லாம்.
நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதம் பஞ்சகாவ்யா கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
மஞ்சள், பூண்டு மற்றும் கருப்பு கரணைகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலில் 30 நிமிடங்களில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
கைத் தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். விசைத் தெளிப்பானில் அடைப்பானையும், குழாயின் நுனிப் பகுதியையும் பெரிதாக செய்து கொண்டால் தெளிப்பு அடைப்பின்றி ஒரே சீராக வரும். பயிர்களுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பதால் மகசூல் கூடுகிறது. மண்ணின் வளம், பயிர்களின் வளம் காக்கப்படுகிறது.
பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.
பூக்கள் வாடாமல் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கும் மற்றும் பழங்களின் தரம் கூடுகிறது. விளைச்சலும் 10-15 நாட்கள் முன்பே அறுவடைக்கு வருகின்றன.
தரமான நஞ்சற்ற பொருள் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாது காக்கப்படுகிறது.
எனவே உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் காக்கவும், குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
- குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இறைச்சிக் கழிவுகளைக் கொண்டு மீன் கரைசல் தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை நடைமுறை ஒன்று உள்ளது.
- பறவைக் கரைசல் மூலம் ஊக்கமளிக்கப்பட்ட மரங்கள், வழக்கத்தை விட 20 சதவீத கூடுதல் விளைச்சல் தரத் தொடங்கியுள்ளது.
தருமபுரி,
தருமபுரி அருகே சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், மண் வளத்தை பாதுகாக்கவும், உயிரிழக்கும் பண்ணைக் கோழிகளைக் கொண்டு பறவைக் கரைசல் தயாரித்து பட்டதாரி இளைஞர் தெளித்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் முட்டைக்காக கோழிகளை வளர்க்கும் கோழிப் பண்ணையை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
கோழிப்பண்ணையில் அவ்வப்போது உயிரிழக்கும் கோழிகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் அவற்றை குழிதோண்டி புதைத்து அல்லது பிரத்தியேக எந்திரம் மூலம் எரித்துத்தான் அழிக்க வேண்டும். இது தான் அரசின் விதிமுறைகள்.
இவர் தனது பண்ணையிலும் இந்த நடைமுறைகளைத் தான் பின்பற்றி வந்துள்ளார். ஆனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள், சுற்றுசூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி, கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பட்டதாரியான மூர்த்தியின் மகன் ஹேமந்த் குமார் (24). கல்லூரி முடித்து வெளியில் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல், சொந்த ஊரில் விவசாயம் செய்தும், அதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பண்ணை தொடர்பாக தருமபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் சாமுவேல் ராஜ்குமாரை ஒருமுறை சந்தித்துள்ளார். அப்போது அவர் வழங்கிய ஆலோசனைகளின்படி புதிய தொழில்நுட்பம் ஒன்றை முயற்சி செய்ய முன் வந்துள்ளார்.
அதாவது, மீன் விற்பனை கடைகளில் மிஞ்சும் மீன் இறைச்சிக் கழிவுகளைக் கொண்டு மீன் கரைசல் தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை நடைமுறை ஒன்று உள்ளது.
அதேபோல, பண்ணையில் உயிரிழக்கும் கோழிகளைக் கொண்டு, 'பறவைக் கரைசல்' தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்தும் புதிய செயல்முறையை முயற்சித்துள்ளார்.
இதில் தொழில்நுட்பம் மூலம், பண்ணையில் தினமும் உயிரிழக்கும் கோழிகளை கரைசலாக மாற்ற, பிரத்தியேக எந்திரம் மூலம் கோழிகளை துண்டுகளாக்கி, நீரில் ஊற வேண்டும். பின்னர் மண் பானையில் இட்டு அதனுடன் சாணக் கரைசல், பனை வெல்லம் அல்லது வெல்லக் கரைசல் அல்லது கரும்புச் சாறு ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் சேர்த்த பின்னர் முக்கால் பானை அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.
பின்னர் மண்பாண்ட தட்டால் பானையை மூடி சாக்குத் துண்டு மூலம் இறுகக் கட்ட வேண்டும். அதன்பின்னர், ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள படுக்கை மீது பானைகளை வரிசையாக அடுக்க வேண்டும். மிதமான ஈரப்பதம் உள்ள கோழி எருவைக் கொண்டு பானையை மூடும் அளவு மூடாக்கு உருவாக்க வேண்டும்.
இந்த மூடாக்கில் ஈரப்பதம் குறையாத வகையில் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு வைக்கப்பட்ட பானையை 90 நாட்களுக்கு பின்னர் எடுத்தால் இறகு, எலும்பு உட்பட கோழிகளின் 90 சதவீத பாகங்கள் கரைசலாக மாறியிருக்கும். இதை வடித்து எடுத்து 1 லிட்டர் கரைசலை 20 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
இந்த பறவைக் கரைசலை நெல்லி, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழவகை மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றி மரத்துக்கு 2 லிட்டர் வீதம் ஊற்றி விடலாம். ஒருமுறை ஊற்றிய மரத்துக்கு மீண்டும் 6 மாதத்துக்கு பின்னர் ஊற்றலாம். இவ்வாறு பறவைக் கரைசல் மூலம் ஊக்கமளிக்கப்பட்ட மரங்கள், வழக்கத்தை விட 20 சதவீத கூடுதல் விளைச்சல் தரத் தொடங்கியுள்ளது.
இதர பயிர்களுக்கும் இந்த கரைசலால் ஊக்கம் அளிப்பது தொடர்பான சோதனைகளை முயற்சித்து வருகிறோம். அதேபோல, செடிகளின் மீது ஸ்பிரே முறையில் இந்த கரைசலை தெளித்தால் கிடைக்கும் பயன் குறித்தும் சோதித்து வருகிறோம்.
இந்த கரைசல் நேரடியாக விற்பனை செய்தால், ரூ.100-க்கும், தண்ணீர் கலந்து விற்பனை செய்தால், ஒரு லிட்டர் ரூ.5 விற்றால் நல்ல வருவாய் கிடைக்கும். இவ்வாறாக உயிரிழந்த கோழிகளால் ஏற்படும் சூழல் பாதிப்பையும் தடுத்து, அதே கோழிகளைக் கொண்டு தயாரிக்கும் பறவைக் கரைசல் மூலம் பயிர்களின் விளைச்சலையும் அதிகரிக்க முடிந்துள்ளது.
இந்த முறையை நாமக்கல் போன்ற அதிக பண்ணைகள் உள்ள இடங்களில் பின்பற்றினால், கூடுதலாக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். பண்ணை உரிமையாளர்களுக்கும் வருவாய் கிடைக்கும். சுற்று சூழல் பாதுக்காக்க முடியும், இயற்கை விவசாயத்தை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்