search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களிமார் விஷ்ணு கோவில்"

    • திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் களிமாரில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் கடந்த வாரம் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் விரைந்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று இரும்பிலி பகுதியில் ரோந்து செல்லும்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் ஓட முயற்சித்தார்.போலீசார் அவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் லியோன்நகரை சேர்ந்த வினித் (வயது 28) என்பதும் களிமார் விஷ்ணு கோவில் உண்டியல் உடைப்பில் தொடர்புடையதும் தெரிய வந்தது. மேலும் வினித் கருங்கல், நித்திரவிளை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து குளச்சல் போலீசார் வினித்தை கைது செய்தனர். 

    • திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் களிமாரில் உள்ளது மகாவிஷ்ணு கோயில்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோயில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்று பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் விரைந்து சென்று கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோயில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இது கோயில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுபோல் மர்ம நபர் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை எடுத்து சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் மெயின்ரோட்டில் களிமார் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் வழிபாடு முடிந்து நிர்வாகிகள் கோவில் கிரில் வாசலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒருவர் கோவில் வாசல் கிரில் திறந்து கிடந்ததை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது கோவில் உள்பக்கமாக இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிலிருந்த காணிக்கை பணம் காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் கிரில் பூட்டையும், உண்டியல் பூட்டையும் உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை. காணிக்கை பணத்தை திருடிய நபர்கள் 2 பூட்டுகளையும் எடுத்து சென்று விட்டனர்.

    இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் ஜெகன்னாதன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசாரும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×