search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றங்கள்"

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
    • கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான 5 வயது சிறுமி, கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம்(வயது28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    அவர் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் 13 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கொலை குற்றச்சாட்டுக்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றச்சாட்டுகளுக்கு 5 ஆயுள் தண்டனைகள், 49 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ7.20லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த 110 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து அஸ்பாக் ஆலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி அஸ்பாக் ஆலம் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பல குழந்தைகளை கொன்ற களியக்காவிளையை சேர்ந்த அழகேசன் என்பவர் 1979-ம்ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    14 பேரை கொடூரமாக கொன்ற சந்திரன் என்பவர் 1991-ம் ஆண்டு கண்ணூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு பல வழக்குகளில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தில் உள்ள 4 சிறைகளிலும் 21 மரண தண்டனை கைதிகள் தூக்கிற்காக காத்திருக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் பூஜாப்புரா சிறையில் 9 பேரும், திருச்சூர் விய்யூரில் 5 பேரும், கண்ணூரில் 4 பேரும், விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் 3 பேரும் உள்ளனர். நீதிமன்றங்களில் மேல்முறையீடு உள்ளிட்ட காரணங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    • உசிலம்பட்டி நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.
    • மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடத்தை அதிகாரிகள் பார்யிவைட்டனர்.

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், நீதிபதிகள் மாரிக்காளை, மகாராஜன், தாசில்தார் கருப்பையா, நில அளவர் பிச்சைமணி மட்டும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் உள்ள அரசு பயணிகள் விடுதி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் ஆகிய பகுதியில் உள்ள காலியிடங்களை பழுதடைந்துள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர்.

    மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    ×