என் மலர்
நீங்கள் தேடியது "தீ மிதி விழா"
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்று விழா, பொங்கல் வைத்தல் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மேலும் நாள்தோறும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் சார்பில் வாணவேடிக்கை மேளதாளத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் வேப்பிலையை கையில் ஏந்தியும் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடனும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்தனர்.
தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக கோவிலில் இருந்து பழைய கோர்ட்டு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலையில் அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் சாமி நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கை, நையாண்டி மேள தாளத்துடன் சப்தா பரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12-ந் தேதி வசந்த உற்சவம், 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடையாற்றி கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- வேடம் அணிந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் அமாவாசை முன்னிட்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ காளியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளி வேடம் அணிந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வினோதமான வழிபாட்டில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் தீ மிதித்து நேற்று கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காளியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
- ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். பக்தர்கள் உருளை தண்டம் போட்டனர். நேற்று அம்மை அழைத்தல் நடந்தது. காலை முதல் இரவு வரை நூற்றுக் கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தீ மிதி விழா நடந்தது. மழை தூறல் விட்டு விட்டு பெய்தநிலையிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், கையில் வேப்பிலை ஏந்தி தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற கைக் குழந்தையுடன் தீ மிதித்தனர்.
வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு குறைந்த அளவில் பக்தர்கள் தீ மிதித்தனர். தீ மிதி விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். திருவிழாவை–யொட்டி இன்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை)உடற்கூறு வண்டிவேடிக்கை நடக்கிறது.
வருகிற 5-ந் தேதி இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாணவேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் மற்றும் சப்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- ஆடிப்பூர விழா நிறைவடைந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது.
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவை ஒட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தனர்.
இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி அமாவாசை முன்னிட்டு நடந்தது
- பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோவில் அருகே ஸ்ரீ நாகாலம்மன் கோவில் தீ மிதி விழா நடைபெற்றது.
நாட்டராம்பள்ளி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் அருகே ஸ்ரீ நாகாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு தீமிதி விழா மற்றும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது. புத்துக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ நாகலம்மனை சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி எடுத்து தீ மிதித்தனர். இந்த திருவிழாவில் ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி ஊர் பொதுமக்கள் மிகவும் செய்து இருந்தனர்.