என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் பிரச்சனை"
- தலைநகர் டெல்லியில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது.
- குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி பிரதமருக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் 28 லட்சம் பேர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு நாளுக்குள் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்கக்கோரி அரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
- தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண் 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.
விரைவாகச் செயல்பட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சென்னையில் மழை தொடர்பான புகார்களை 1913, 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய எண்களிலும் 94454 72075 என்ற கைப்பேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
- 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு ஜோதி தெரு மற்றும் அதை சுற்றி சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு ஜோதி தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு மூலமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான மோட்டார் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அடிக்கடி செயல்படாத நிலை இருந்ததால் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக மண்டல தலைவரும், 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் தற்போது புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஜோதி தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள 13 தெருக்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும்.
- மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் குடிநீர் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. , தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜு, பேரூராட்சி அலுவலர் குமார், பேருராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்செல்வி, பிச்சையன், துணைத் தலைவர் கதிரவன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அவ்வை பாலசுப்ரமணியன், சௌரிராஜன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சி தொகுதிக்கு மக்கள் தொகை கணக்கின்படி குடிநீர் வழங்குவதில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் பற்றாக்குறை அளவை சுமூக கணக்கிட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும். ஆனால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதால் உடனடியாக தண்ணீர் ஏற்றும் இடத்தில் அளவீடு கருவி பொருத்துவது எனவும் மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி குடிநீர்வடிகால் வாரிய நீர் ஏற்று மையத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் தலைஞாயிறு தண்ணீர் ஏற்றும் நேரத்தை தனித்தனியாக குறிப்பிட்டு போர்டுவைக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கஜா புயல் காலம் வரை நீர் ஏற்றும் மின் நிலையத்திற்கு 24 மணி நேரமும்மின்சாரம் வழங்கப்பட்டது போல் தற்போது வழங்க வேண்டும் .ஒரு நாள் விட்டு ஒரு நாள் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவேண்டுமென கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்