என் மலர்
நீங்கள் தேடியது "வாகனம் மோதல்"
- தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
- அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலமுருகன் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ராமநத்தம் போலீஸ் சரகம் தனியார் பள்ளி முன் இரவு சுமார் 11மணி அளவில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (28) இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார். ராமநத்தம் அருகே தனியார் பள்ளி அருகில் அங்கு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்றபோது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
- பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
விழுப்புரம்:
திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியுள்ளது .
இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவத்திற்க்கு நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த மூதாட்டியின் மீது மோதிய வாகனம் குறித்து பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழாவுக்காக வந்திருந்தவர் பஸ் நிறுத்தம் அருகே நின்றார். அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்
விழுப்புரம்:
புதுவை தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ஜோதி (வயது 44). இவரது சொந்த ஊர் செஞ்சி அருகே மேல்சித்தாமூர் ஆகும். ஜோதி மேல்சித்தாமரில் நடைபெறும் திருவிழாவுக்காக வந்திருந்தவர் வல்லம் பஸ் நிறுத்தம் அருகே நின்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சமயநல்லூர் அருகே வாகனம் மோதி பலியானவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோரம் நடந்து சென்றபோது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை மில் காலனி முன்பு 2 நாட்களுக்கு முன் அங்குள்ள தடுப்பு சுவரில் சாலையோரம் மண் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர் மற்றும் தொழிலாளர்கள் கூட்டத்தில் தனியார் பஸ் புகுந்தது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் 2 பேர் அடையாளம் தெரியவந்தது. ஆனால் ஒருவர் மட்டும் யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் அங்கு எப்படி வந்தார்? மண் அள்ள வந்த கூலி தொழிலாளியா? எப்படி அவர் இறந்தார்? சாலையோரம் நடந்து சென்ற போது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 65), இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்தார்.அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மதுரை ஐகோர்ட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
- மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.
மதுரை
மதுரை ஐகோர்ட்டு அருகில் 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் அவரது தலை சிதைந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சமையன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். அதில் அந்த வாலிபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகராஜ் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குள் ஓலக்கூர் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் இறந்து கிடந்த நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மானூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
- படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 18).
இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(26). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அரவிந்தை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு சென்றார்.
மானூர் பல்லிக்கோட்டை அருகே சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் தேடி வருகின்றனர்.
- 2பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
- பாஷா பலத்த காயங்கள் அடைந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சலாம் பாஷா. அவரது நண்பர் தரணி. இவர்கள் 2பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இதில் சலாம் பாஷா பலத்த காயங்கள் அடைந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த தரணி சிறு காயங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இது குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.