search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணன் கோவில்"

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • குழந்தையில்லாதவர்கள் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
    • கிருஷ்ணஜெயந்தி அன்று நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரபலம்.

    திண்டுக்கல் நகரில் யாதவ மேட்டுராஜக்காபட்டி என்ற இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் பஜனைமடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த இடத்தில் கிருஷ்ணனுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனெனில் இங்கு வந்து பஜனை நடத்தும் பக்தர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன.

    குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்கு தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவி வந்தது. குறிப்பாக குழந்தையில்லா பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு பல ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தையை இந்த கோவிலில் கிருஷ்ணன் முன்பு படுக்கவைத்து முதன்முதலாக உணவு கொடுப்பார்கள்.

    அவ்வாறு கொடுக்கும்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழும் என நம்பப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய இந்த கிருஷ்ணன் கோவிலில் முதன்முதலாக 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    உறியடி திருவிழா

    ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி அன்று இங்கு நடத்தப்படும் உறியடி திருவிழா மிகவும் பிரபலமாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் இப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு, கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்வதும், மறுநாள் உறியடி திருவிழா நடத்தி அதில் இப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.

    இதுமட்டுமின்றி கிருஷ்ணபரமாத்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • தீயில் கருகி முதியவர் பலியானார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய தாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 62). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் வசிக்கும் தனது சகோதரி சரஸ்வதி வீட்டிற்கு ராமராஜ் வந்துள்ளார்.

    அன்றிரவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற ராமராஜ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர் தாதம்பட்டிக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினரும் கருதி விட்டனர்.இதற்கிடையில் சரஸ்வதி வீட்டில் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தில் உடல் கருகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் ராமராஜ் என தெரியவந்தது.

    வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது.
    • பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவில் கணபதி ஹோமம், அகண்டநாம ஜெபம், அன்னதானம், தீபாரா தனை, லட்சார்ச்சனை, சுழலும் சொல்லரங்கம், பகவத்கீதை பாராயணம், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை சுமங்கலி பூஜை, மாலை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசை யுடன் யானைமீது சந்தனகுடம் பவனி நடந்தது.

    பவனியானது பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது. இரவு சமய மாநாடு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு உறியடி, 5 மணிக்கு சுதர்சன ஹோமம், 6.45க்கு திருவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு நெய்யப்பம் சுடுதல், இரவு 12 மணிக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாங்கி கொடுக்கப்பட்ட வளையல்களால் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மாலையாக அணிவித்தனர். அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அம்பாளுக்கு சாத்திய வளையல்கள் பெற்று செல்பவர்கள் வீடுகளில் அனைத்து மங்கள காரியங்களும் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆடிப்பூர விழாவில் கிழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    ×