search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திரதின விழா"

    • தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். தண்டவாள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் ரெயில் பெட்டிகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகின்றனரா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மசூதி, தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் எவ்வித காரணமும் இன்றி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பிரதீப் குமார் தேசியக்கொடியறே்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 41 ஆயிரத்து 532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    திருச்சி:

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவு சின்னத்தில் கலெக்டர் மா.பிரதீப் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் சரியாக காலை 9.15 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 9.20 மணிக்கு உலக சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். மேலும் மூவர்ணம் பொருந்திய பலூன்களின் தொகுப்பும் பறக்க விடப்பட்டது.

    இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறையினர் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக சேவை புரிந்த தனி நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலை துறை, வேளாண்துறை வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 41 ஆயிரத்து 532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் தங்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், அரசு அலுவலர்கள் 318 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரவர் வீடுகளுக்கு தாசில்தார்கள் சென்று பொன்னாடை அணிவித்து தியாகிகளை கௌரவித்தனர். இந்த விழாவில் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தின விழா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை பார்வையிட மாணவர்கள் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் இன்றைய சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரளான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
    • நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நமது இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

    சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், வரலாற்றின் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில், தங்களது வீடுகளில் தேசியக் கொடி என்ற இயக்கத்தின் மூலம் மேலும் தேசப்பற்றை வலுப்படுத்துவோம் என்றும், ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகளில் பறக்க விடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்குவதற்கு தேவையில்லை என்றும், மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கட்டும் என்றும், அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கொடி காத்த குமரன்' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தான். அந்நியர் ஆட்சியில், நமது தேசியக் கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கொடிகாத்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் தீரர்களையும் 75-வது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முன்னோடித் திட்டமான "பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின்" ஒரு பகுதியாக மதுரையில் "மாமதுரை போற்றுதும்" என்னும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் பல்லுயிர் வளம் பெருக்கவும் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும், மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் வேம்பு, இலுப்பை போன்ற பாரம்பரிய மரங்களும் மஞ்சநத்தி, புங்கை, பூவரசு போன்ற மருத்துவ குணங்கள் மிகுந்த மரங்களும் மா, கொய்யா, நாவல் போன்ற பழமரங்களும் நடப்படும். இந்த மாபெரும் முன்னெடுப்பில் பங்கேற்க அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பசுமை அமைப்புகள், குடியிருப்போர் நலச்ச–ங்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மாணவ-மாணவிகள் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சரி வைத்துள்ளவர்கள் தங்கள் பங்களிப்பினை மரக்கன்றுகளாகவும், பொருளாகவும் மனித உழைப்பாகவும் அளிக்கலாம்.

    மரக்கன்றுகள் தொடர்பான பதிவுகளையும், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் வருகையையும் வருகிற 10-ந் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 93630 05523 மற்றும் 94452 29295 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×