என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாழைப்பழங்கள்"
- செவ்வாழை வாழைத்தாரில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வாழைகள் ஒரு சேர இருந்தது.
- சுற்று வட்டார மக்கள் திரண்டு வந்து வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
அருமனை:
அருமனை பகுதி தோட்டத்தில் இருந்து விவசாயி ஒருவர் பழக்கடைக்கு வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தார். அதில் ஒரு தார் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. அதற்கு காரணம் அந்த செவ்வாழை வாழைத்தாரில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வாழைகள் ஒரு சேர இருந்தது தான்.
இதனை கேள்விப்பட்ட சுற்று வட்டார மக்கள் திரண்டு வந்து வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
- சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழம் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- உணவு அதிகாரிகள் நடவடிக்கையால் 195 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழம் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 195 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனம் 150 மி.லி. பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் மற்றும் ரசாயனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, ஆய்வு செய்யப்பட்ட 7 பழக்கடைகளில் 2 கடைகளில் மட்டுமே உணவு பாதுகாப்பு உரிமம் பார்வையில் வைக்கப்பட்டிருந்தது. மற்ற கடைகளில் உரிமம் பார்வையில் வைக்கப்படவில்லை. ரசாயனம் கலந்து பழங்கள் பழுக்க வைத்த 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த கடைகள் யாவும் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.
- கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
- மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.
பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்