search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ- மாணவிகள்"

    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.
    • பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

    சிவகங்கை

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.

    அண்ணா பிறந்த நாள் ேபச்சுப்போட்டியில் மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீலக்ஜனா முதல் பரிசையும், சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகாஸ்ரீ 2-வது பரிசையும், பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவதாரணி 3-ம் பரிசையும் பெற்றனர்.

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசை சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி, திருக்கோஷ் டியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகா லெட்சுமி ஆகியோர் பெற்றனர்.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலேஸ்வரன் முதல் பரிசையும், தி.புதூர் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவி நவ்வி இளங்கொடி 2-வது பரிசையும், தேவகோட்டை புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா 3-ம் பரிசையும் பெற்றனர்.

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசினை மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி கோபிகா, திருப்பத்தூர் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹசினா ஆகியோர் பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவி களுக்கு முதல் பரிசு ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம், சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் நாகராசன், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் வெண்ணிலா, சிராஜுதீன், முனியசாமி, கார்த்திகை ஆகியோர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் கல்வி மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் 1489 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கின்றனர்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ-மாணவிகளுக்கு தனி தேர்வு இன்று நடை பெற்றது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ-மாணவிகளுக்கு தனி தேர்வு இன்று நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டத் தில் விழுப்புரம் கல்வி மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் மொத்தம் 1489 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கின்றனர். விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 785 மாணவ -மாணவிகளும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 704 மாணவ மாணவி களும் தேர்வு எழுதினார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் செயின்ட் மைக்கேல் எஸ். மேல்நிலைப் பள்ளி , செஞ்சி செயின்ட் மைக்கேல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திண்டிவனம் செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் செயின்ட் பிலோமினாஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாணக்யா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி திண்டிவனம் அரசு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கானை கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி ஜான் டூவி மெட்ரிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    • மாணவர்களை காட்டிலும் மாணவிகள் சாதனை
    • மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் குமரி மாவட்டம் மாநில அளவில் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 386 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 21 ஆயிரத்து 725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.05 சதவீதமாகும். மாணவர்கள் 10 ஆயிரத்து 808 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 269 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.01 சதவீதமாகும். மாணவிகள் 11 ஆயிரத்து 578 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 456 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.95 சதவீதமாகும்.

    மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 95.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் குமரி மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 56 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 980 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில், 5 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.23 சதவீதம் ஆகும். மாணவர்கள் 3 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 777 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92.23 சதவீதம் ஆகும். மாணவிகள் 2 ஆயிரத்து 969 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 918 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.28 சதவீதமாகும்.

    • தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் 64 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் 64 பேருக்கு ள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் இளமுருகன், மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், ஆசிரியர் குழு தலைவர் ஆறுமுகம், பாபு, ஆதி மூலம், ரமேஷ், வெங்கடேஷ், மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
    • புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூடல் மாமதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

    தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

    தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்களும் நடைபெற உள்ளன. வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டி நடைபெற்றது

    திருப்பூர்

    திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மற்றும் யோகா கலாசார சங்கம் ஆகியவை சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களாக பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி, மண்டல யோகா டிரஸ்ட் தாளாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியானது பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நேகா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் ஆகியோர் வெற்றி பெற்று, அந்தமானில் நடைபெறும் உலக அளவிலான யோகாசன போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி பரிசுகளையும், சுழல் கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதேபோல், பிரண்ட் 1 லைன் குழுமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர். அவர்களுக்கும் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா, யோகா ஆசிரியர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×