search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 லட்சம்"

    • சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
    • வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகர் பகுதியில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மதுபானங்கள் அதிக அளவில் பதுக்கி வைக்க ப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் சம்மந்தப் பட்ட வீட்டினை ரகசியமாக கண்கா ணித்தனர்.

    அப்போது வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து மதுபானங் களை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் சட்ட விரோதமாக மதுவிற்ற முனிசிபல்காலனி ஜான்சி நகரை சேர்ந்த சதீஸ்குமார் (32), கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • மர்மநபர்கள் கைவரிசை
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.

    இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,

    • வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
    • பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    • சேவை குறைபாடு புகாரில் நடவடிக்கை
    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கல்பாலத்தடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் கார் கடன் பெற்றிருந்தார். இதனை மாதம் தோறும் கட்டி முடித்த நிலையில், கடன் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட வில்லை.

    இது பற்றி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மேலும் கூடுதல் தொகை கட்ட வேண்டும் என கூறியதால் அதனையும் சவுந்தர்ராஜ் கட்டி உள்ளார்.

    ஆனாலும் நிதி நிறுவனம், அவரது கடனை முடிக்காமல் மேலும் பணம் கேட்டதோடு, சென்னைக்கு நேரடியாக வரவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சவுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசா ரித்து, நிதி நிறுவன சேவை குறைபாட்டினை சுட்டி க்காட்டி, சவுந்தர்ராஜிக்கு நஷ்ட ஈடு(அபராதம்) ரூ. 1 லட்சம் வழங்க உத்தர விட்டனர். மேலும் அவரி டம் ஏற்கனவே கூடுதலாக வசூ லிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 724 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்து 724 -ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். கடன் இல்லை என்ற சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    • முகமூடி திருடர்கள் கைவரிசை
    • களியக்காவிளை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரவு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதி யில் கடந்த 5 வருட மாக பேக்கரி கடை நடத்தி வருகி றார். நேற்று இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது பின்பக்க சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    கடைக்குள்சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவ த்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. கடை யின் பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து பிரவு சிங் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கடைக்கு உள்ளே புகுந்து கல்லாவை உடைத்து பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை பகுதியில் அடிக்கடி கடைகளை உடைத்து திருட்டு நடப்பதால் கடை நடத்தி வருபவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • இணை இயக்குனர் தகவல்
    • 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைேவாராக்கும் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் அக்ரி கிளினிக் (வேளாண்) அல்லது வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்ப டுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயனடைய தகுதியான பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    எனவே இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகுதி ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பாக குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுக்காக்களில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
    • பொன்னுராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    கரூர்:

    கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுராஜ். இவரது மகள் ஜமுனா. இவரது கணவர் தீபன். இவர்களது மகன் மித்ரன் (5). இவர் தனது தாத்தா பொன்னுராஜ் பாதுகாப்பில் இருந்தார். மித்ரனை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி வகுப்பில் பொன்னுராஜ் சேர்த்தார்.

    இதற்காக ரூ.38 ஆயிரத்தை மித்ரனின் தாய் ஜமுனா ஆன்லைன் மூலம் கடந்த செலுத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் வகுப்பு தொடங்கும் என கூறிய நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடங்கவில்லை.

    இதுகுறித்து பொன்னுராஜ் அந்த பள்ளியை அணுகி விசாரித்தபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி பொன்னுராஜ் கேட்டதையடுத்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்வி கட்டணம் ரூ.38 ஆயிரம் திரும்ப செலுத்தக்கோரியும், ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் சேவைக்குறைபாடு ஏற்படுத்தியதற்காகவும், கடுமையாக நடந்து மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக ரூ.2 லட்சம் வழங்கக்கோரியும் பொன்னுராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அளித்த உத்தரவில் கல்விக்கட்டணம் ரூ.38 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடனும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைப்பாட்டிற்காகவும் ரூ.1 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×