search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருவர் கைது"

    • 11 பேர் கைதான நிலையில், இன்று இருவர் கைது.
    • இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், இன்று மலர்க்கொடி, ஹரிஹரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 13 பேரில் திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் பிரியாவை கைது செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள துணிக்கடையில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. காவல்துறையினரை கண்டதும் அரூர் ஆத்தோர வீதியை சேர்ந்த பூஞ்மாலை செட்டியார் மகன் சிவகுமார் (வயது 41) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடமுயற்சி செய்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒரு கிலோ 100 கிராம் உள்ள கஞ்சா பொட்டலங்களை தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவக்குமாரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் உள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரூரில் குடியிருக்கும் பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி பிரியா (39) என்பவரிடம் கஞ்சா விற்பனையில் உதவியாளராக வேலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து பிரியா வீட்டில் சோதனை செய்து போது ஒரு கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்ததை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் பிரியாவை கைது செய்தனர்.

    கஞ்சா விற்பனையில் தொடர்ந்து பிரியா ஈடுபட்டு வருவதும், இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வரவழைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இரண்டு பேரையும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்த போலீசார் இருவரிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான சுமார் இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
    • அஜாக்கிரதையாக இருந்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவரது மனைவி துர்காதேவி (26). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் உள்ள உறவினர் பாலு தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுத்தையா, ரபீக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் துர்காதேவிக்கும் தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது. சம்பவத்தன்று அஜய் மற்றும் துர்காதேவி உல்லாசமாக இருப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அஜாக்கிரதையாக இருந்த தாய் துர்காதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜய் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார்சைக்கிளில் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர்.

    கரூர்:

    கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது கரூர் தெரசா கார்னர் பகுதியில் சென்றபோது கரூர் ராமனூரை சேர்ந்த பிரபு, புதுக்கோட்டையை சேர்ந்த பாக்கியராஜ் இருவரும் மோட்டார்சைக்கிளில் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இதனால் பஸ்சின் கண்டக்டர் அவர்களிடம் ஏன் வழிவிடாமல் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது பிரபு, பாக்கியராஜ் இருவரும் பஸ்சுக்கு முன்னாள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பஸ்சின் டிரைவர், கண்டக்டர், பயணி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • விருத்தாசலத்தில் பணம் வைத்து சூதாடி இருவர் கைது செ்ய்யப்பட்டார்.
    • போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் உள்ள ஆயியார்மடம் மணிமுத்தாறு ஆற்றின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பழமலைநாதர் பகுதியை சேர்ந்த ராஜ் (26), சதீஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர், மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×