search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடூர தாக்குதல்"

    • மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
    • விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

    மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.
    • தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள்.

    நேற்று மாலை இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

    பின்னர் மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் காயத்துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி பாண்டியம்மாள் (வயது54). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    செங்குறிச்சி ஊராட்சி யில் துப்புரவு தொழி லாளியாக பணிபுரிந்து வருகிறார். அங்கு புதுப்பட்டி ஆலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (53) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பழனியம்மாள் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இதனால் இருவருக்கும் இைடயே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி பாண்டியம்மாளை கடுமையாக தாக்கினார்.

    இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவரை இன்று காைல திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

    மேலும் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ஜெய்சங்கர் ஆதரவாளர்கள் சேகர் ஆதரவாளர்களை தாக்கியதாக தெரிகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் கேணிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர் . அவரது மனைவி புவனேஸ்வரி(42). இவர் நேற்று தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்றதை பார்வையிட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் மனைவி இந்துமதி(30), 100 நாள் வேலைக்கு வரும்போது எந்தவித உபகரணங்கள் இன்றி வந்துள்ளார். இதனை ஊராட்சி மன்ற தலைவர் வேலை செய்ய உபகரணங்கள் எடுத்துவரவில்லையா எனகேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் பஞ்சாயத்துதுணை தலைவர் சேகர், அவரின் மனைவி இந்துமதி ஆதரவாளர்கள் பஞ்சாயத்து தலைவரை தாக்கினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ஜெய்சங்கர் ஆதரவாளர்கள் சேகர் ஆதரவாளர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் மயிலம் போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து தலைவர் புவனேஸ்வரி கொடுத்து புகாரின் பேரில்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர்அவரது மனைவி இந்துமதிஆதரவாளர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், மோகன், சஞ்சய், கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, முனியப்பன் ஆகிய 9 பேர் மீதும், ஊராட்சி மன்ற துணை தலைவர் இந்துமதி அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, அவரது கணவர் ஜெயசங்கர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் மீதும் மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×