search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி அதிகாரி"

    • மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
    • மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக கீதா ஜெயின் உள்ளார். முன்னாள் பாரதிய ஜனதா மேயரான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற கீதா ஜெயின் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது அதிகாரி ஒருவர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த கீதா ஜெயின் பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த அதிகாரியை கன்னத்தில் அறைந்தார்.

    இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.

    திருவொற்றியூர்:

    மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.

    அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் சண்முகம். இவர் தனது கடைக்கு உரிமம் பெற ராயபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உரிமம் வழங்கும் ஆய்வாளராக பணியாற்றிய நெப்போலியன் என்பவரை அணுகினார்.

    அப்போது போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சண்முகம் மறுத்தார். இதையடுத்து சண்முகம் ரூ.1500 கொடுக்குமாறு கேட்டார். அதற்கு சண்முகம் சம்மதித்தார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு ரசாயனம் தடவிய ரூ.1,500 பணத்தை நெப்போலியனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நெப்போலியனை கைவும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் இதுதொடர்பான வழக்கு சிறப்பு கோர்ட்டிலும் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரி நெப்போலியனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். இதையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை திடீரென திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதேபோல் தொடர்ந்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×