என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "30 பேர் கைது"
- மதுபாட்டிலுடன் 6 பேர் சிக்கினர்
- கோவையில் ஒரே நாளில் 30 பேரை கைது செய்து உள்ளனர்.
கோவை,
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடையை மீறி குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு உட்பட்ட இடங்களில் சோதனை செய்தனர்.
துடியலூர் போலீசார் இடையர்பாளையம், வெள்ளகிணறு, கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய இடங்களிலும், மதுக்கரை போலீசார் போடிப்பாளையம், கிணத்துக்கடவு போலீசார் தாமரை குளம் மற்றும் வடவள்ளி, தொண்டமுத்தூர், செட்டிப்பாளையம், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், நெகமம், பொள்ளாச்சி, கோட்டூர், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடைகளில் குட்கா விற்ற வியாபாரிகள் 20 பேரை கைது செய்து அங்கு இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மாநகர் போலீசார் பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் சோதனை செய்து 10 பேரை கைது செய்தனர்.மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக மாநகர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3150-யை பறிமுதல் செய்தனர்.கோவையில் நேற்று ஒரே நாளில் குட்கா விற்ற 30 பேரும் மது பாட்டில் பதுக்கி விற்ற 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
- மதுரையில் அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாண போராட்டம் நடந்தது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை கே.புதூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓய்வூதி யர்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கருப்பு முகக்கவசம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
அப்போது மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. விதவைகள், விவாகரத்து பெற்றோர் மற்றும் ஊன முற்றோருக்கான குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்த ஓய்வூதியர் பனிக்காலத்தையும் ஓய்வூதியத்தில் கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மாரிச்சாமி, செயலாளர் சர்தார் பாட்ஷா, பொருளாளர் பால்ராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் பால்ராஜ் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
- சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
- போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.
சேலம்:
பா.ஜனதா ஆட்சியில் ஜி.எஸ்.டி விதிப்பால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதில் நிர்வாகிகள் வர்த்தக பிரிவு சுப்பிரமணி, தாரைராஜகணபதி, மாநில செயலாளர் வசந்தம் சரவணன், முன்னாள் தலைவர் மேகநாதன், துணைதலைவர்கள் பச்சப்பட்டி பழனி, கோபிகுமரன், மொட்டையாண்டி, ஷேக் இமாம், பாண்டியன்,சிவக்குமார், ஈஸ்வரி வரதராஜ் மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நட்ராஜ், நாகராஜ், ராமன், ரஞ்சித்குமார், கோவிந்தன், நிசார், இளைஞர் காங்கிரஸ் ரத்தினவேல், அரவிந்த், ராஜ்பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் சுமார் 30 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்