என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி"
- மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தங்க மேடு தம்பி கலை அய்யன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் குணசேகரன் என்ற பேச்சியப்பன் (வயது 55). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் அம்மாபேட்டை போலீஸ் நிலை யத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று சிறைக்கு சென்றதை நினைத்து மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இதுகுறித்து அவ ரது மனைவி பழனிய ம்மாள் காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குமார், பாபுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அடி நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பாபு உடன்படவில்லை. ஆக்கிரமித்த ஒரு அடி நிலத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தரப்பு பாபுவை அடித்து உதைத்து ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இந்த ெகாலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆயுள்தண்டனை
இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ரத்தம் படிந்திருந்த சட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு கூறினார். அதில் குமார், பிரேம்குமார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை யொட்டி அவர்களது உறவினர்கள் கோர்ட்டில் கூடியிருந்தனர். குமார், பிரேம்குமார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதும் சோகம் அடைந்தனர். 2 பேரையும் ஜெயிலில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி லீலாவதி ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர்.
- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
- கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
பல்லடம், ஆக.19-
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 44). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில் வேலைக்குச் சென்றவர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடம் நோக்கி வந்துள்ளார். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.
- கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார்.
- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி :
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் (வயது 50). இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார், டேவிட் ஜெயக்குமார் ஆகியோருடன் நேற்று காலை புத்தளம் ஜங்ஷனில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை அவதூறாக பேசினா ராம். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அங்கு இவரது மகன்கள் அபினேஷ் (21), ஆகாஷ் (20) மற்றும் புத்தளத்தை சேர்ந்த சதீஷ் (43) ஆகியோரும் வந்துள்ள னர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை தாக்கியதோடு மிரட்டலும் விடுத்ததாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி ராஜ்குமார் உள்பட 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.படுக்காயம் அடைந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரகனி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பரமசிவம் கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பிறகும் அவரது உடல்நிலை சரியாக ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- கிணற்றில் விழுந்த ராஜேஷை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
வெள்ளகோவில் ூ
வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் மகன் ராஜேஷ் (வயது 28). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள சின்னமுத்தூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை சின்ன முத்தூரில் உள்ள கிணற்றில் குடிபோதையில் ராஜேஷ் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த ராஜேஷை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த தேவலாபு ரம் பகுதியை சேர்ந்தவர் கனக ராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று சான்றோர் குப்பம் பகுதியில் ஒருவீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த உயரழுத்த மின்ஒயரில் தவறுத லாக கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது.
- நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்களான சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தபுஷ்பராஜ் (வயது 23), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த மணி, வீரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த வீட்டையொட்டி மின்சார கம்பம் இருப்பதுடன் ஒயரும் செல்கிறது. நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது. மின்சார கம்பி மீது படாமல் இருக்க தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் புஷ்பராஜ் அலுமினியத்தால் ஆன மட்டை பலகையை எடுத்த போது, அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார கம்பி மீது உரசியது.
இதனால் புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த வீரன், மணி ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். வீரன், மணி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மின்சாரம் தாக்கி பலியான புஷ்பராஜ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புஷ்பராஜ் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 6-ந் தேதி அஜின் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்கச்சென்றுள்ளார்
- அவரை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள குட்டைகுழி புதுக்காடு வெட்டி விளையை சேர்ந்த வர் அய்யப்பன். இவரது இளைய மகன் அஜின் (வயது26).
கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அஜினுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.இவர் காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலையில் நண்பர்களுடன் அருகில் உள்ள முட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கும்.
கடந்த 6-ந் தேதி அஜின் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்கச்சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முட்டைக்குளத்தில் அஜின் பிணமாக மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.அவரது அண்ணன் அஜீஸ் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று பார்த்து இதனை உறுதி செய்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அஜின் மது போதையில் தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டதா? வேறு யாராவது தாக்கினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ் அழகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (31). கட்டிட தொழிலாளி. இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் அழகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே சண்டை ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சவுமியா, தமிழ் அழகனை விட்டு குழந்தை களுடன் பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிகமாக மது குடித்து வந்த தமிழ் அழகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ் அழகனை மீட்டு பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தமிழ் அழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்