search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி மலைரெயில்"

    • இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும்.
    • இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து, ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிந்ததாலும், 23 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

    இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    23 நாட்களுக்கு பிறகு இன்று ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவை தொடங்கியது. 

    • குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
    • ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் தொட்டகம்பை, சேரனூர், குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.

    சேதமடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    அவருடன் கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்ஸஸ் சந்திரன், பாசறை பேரூராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூராட்சி செயலாளர் சரவணன், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது.
    • ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

    கோவை

    சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மலை ரெயில் நிலையத்தின் கெட்டி - லவ்டேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் மரம் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.இதன் காரணமாக இன்று குன்னூரில் இருந்து 07.45 மணிக்கு புறப்பட்ட ரெயில் கெட்டி - ஊட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி- குன்னூர் ரெயில் இன்று 09.15 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×