search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொகரம்"

    • இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கான் சின்ன மக்கான் மொகரம் திருவிழா கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மேல் மக்கான் முதல் நாள் நிகழ்ச்சியாக குண்டம் நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிறைவு நாளான நேற்று மாலை 5 மணி அளவில் மேல் மக்கான் அல்லா சாமியும், கீழ் மக்கான் அல்லா சாமியும், தேசிசெட்டி தெருவில் கூடின. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து சாமியை வழிபட்டனர்.

    மேலும் அல்லாஹ்வின் மீது மிளகு, முத்து கொட்டை, உப்பு அல்லா சாமி மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் அல்லாசாமி முன்பு இஸ்லாமிய இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் தலைமையில் காவேரிப்பட்டணம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

    • மொகரம் பிறை அறிவிக்கப்பட்டது.
    • மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின் படி ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் பிறை 29, கடந்த 18-ந்தேதி மாலை ஹிஜ்ரி 1445 மொகரம் பிறை தென்படாத தால் நேற்று (20-ந்தேதி)மொகரம் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டி ருக்கிறது. எனவே 29-07-2023 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆஷுரா தினமாக கொண்டாடப்படும் என்பது தெரியப்படுத்தப்படுகிறது.

    ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளன்று தானும் நோன்பு நோற்று ஸஹா பாக்களையும் நோன்பு நோற்க ஏவியுள்ளார்கள். மற்றும் அடுத்த ஆண்டு (தான் ஜீவித்திருந்தால்) மொகரம் பிறை 9 அன்றும் நிச்சயமாக நோன்பு நோற் பேன் என்பதாக கூறிய நபி மொழி ஸஹீஹ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் முஸ்லிம் ஜமாஅத்தார் களாகிய நாமும் மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது. எனவே மேற்கூறப்பட்ட நாட்களில் நோற்று அதன் மகிமையை பெற்றுக் கொள்ளுமாறு ஜமாஅத்தார் கள் அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • வாராப்பூர் ஊராட்சியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் பாத்திமா அஸ்ஸனா உஸ்ஸனா தர்காவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இதில் பங்கேற்பார்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த விழாவானது இப்பகுதி மக்களால் சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாராப்பூரில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து ஆண்கள் மட்டும் 3 முறை (நெருப்பு தணலில்) பூக்குழியில் இறங்கினர். பின்னர் சந்தனம் பூசுதல் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    திருழாவை முன்னிட்டு தப்பாட்டம், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிநாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நோய் தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மொகரம் பண்டிகையையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (9-ந்தேதி) மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×