என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாக்க வேண்டும்"
- மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 நடந்ததுதிருப்பத்தூர்
- கலெக்டர் பேச்சு
திருப்பத்தூர்:
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 ஒரு நாள் மெகா நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே மொளகாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குநேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர்.பிரேம் குமார் தலைமை வகித்தார்.
கல்லூரி தாளாளர் சலேத்மேரி சாமிநாதன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் மேஜர் ரேணிசகாயராஜ் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வை யிட்டார்கள். பின்னர் கலெக்டர் பேசியதாவது;
இந்த வகையான போட்டிகளை நடத்துவதன் மூலமாக தங்களுக்கு எந்த விதமான திறமை இருக்கின்றது என்று அறிந்து கொண்டு, உங்களை வளர்த்துக் கொண்டீர்களே ஆனால் வாழ்க்கை மாறும். கல்வி என்பது நம்முடைய சிந்தனையை ஊக்குவிப்பது தான். எவ்வாறு சிந்திப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கல்வியின் உடைய நோக்கமே, கிளர்க்காக மாற்றுவதோ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற்றுவதோ நீதிபதியாக மாற்றுவதோ கல்வினுடைய நோக்கமல்ல, கல்வி தகுதியின் நோக்கம் தான் அது.
நாம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும், திற ன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமைகளை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், ஒன்றியக்குழு தலைவர் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆயர் மார் ஜார்ஜ் ராேஜந்திரன் அறிவுரை
- முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினர்
கன்னியாகுமரி :
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் வரவேற்பு நடனமாக மாணவிகளின் பரத நாட்டியம் ஆடினர். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களை கவனிக்க வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி கொண்டி ருக்கின்றன. மாணவர்க ளாகிய உங்கள் வளர்ச்சியில் உங்கள் பெற்றோர்களை உங்களுக்கு உறுதுணை யாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். உங்கள் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பை எப்போதும் மறந்து விடாதீர்கள். திருமறையானது வயதான காலத்தில் உனது தாய் தந்தையரை பாதுகாப்பது உனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை தரும் என்று கூறுகிறது. ஆகவே மாணவர்கள் உங்கள் பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் பாதுகாத்து கொள்ளுங்கள் என கூறினார்.
பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், குமரித்தோழன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட டி.வி. புகழ் பாலா மற்றும் வினோத் ஆகியோரின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் குமரித்தோழன் மாணவ,மாணவிகள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களது இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? இங்கிருந்து மாணவர்களாகிய நீங்கள் வெளியே செல்லும்போது இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்யப்போகி றோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பேசினார்.
தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவுத்துபறம்பில் சிறப்புரையாற்றும் போது வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கையை பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்று பேசினார்.
கல்லூரி துணை முதல்வர் சிவனேசன் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை.
- நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இம்முகாம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை. அதை முறையாகப் பராமரித்து பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் வாழ்வதும், அதை பாழ்படுத்தி வீணடிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இந்த பூமியில் நம் பிறப்பு மூலம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் உதவும் வகையில் நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.நம்மை நம்பியுள்ள நம் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எனவே அதை முறையாக நாம் பாதுகாத்து நலமுடன் இருக்க வேண்டும்.வேலைப் பளு காரணமாக மருத்துவ பரிசோதனைக்கும், உடல் நலம் காக்கவும் இயலாத நிலையில் உள்ளோருக்கு இது போன்ற மருத்துவ முகாம்கள் பயன்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி நாகராஜன், மோட்டார் விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வக்கீல் சங்க நிர்வாகிகள், பழனிசாமி, சுப்ரமணியம், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்