search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    • கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை சோதனை
    • ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயங்குகிறது.

    வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், நகர்புற மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுபவர்கள் என தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் மருத்துவமனையின் கோப்புகள், நோயாளிக்களுக்கான தனி பிரிவுகள் உள்ளதா, கழிப்பறை வசதி, சிகிச்சை முறை, தண்ணீர் வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உள்நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் பணிபுரியும் நேரம், பணி சுமை குறித்த ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், சுகாதார இணை இயக்குனர் டாக்டர். விஜயா முரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி, மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • டீ குடிக்க செல்வதாக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடை பெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார்.

    அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்தபெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 நடந்ததுதிருப்பத்தூர்
    • கலெக்டர் பேச்சு

    திருப்பத்தூர்:

    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 ஒரு நாள் மெகா நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே மொளகாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குநேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர்.பிரேம் குமார் தலைமை வகித்தார்.

    கல்லூரி தாளாளர் சலேத்மேரி சாமிநாதன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் மேஜர் ரேணிசகாயராஜ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வை யிட்டார்கள். பின்னர் கலெக்டர் பேசியதாவது;

    இந்த வகையான போட்டிகளை நடத்துவதன் மூலமாக தங்களுக்கு எந்த விதமான திறமை இருக்கின்றது என்று அறிந்து கொண்டு, உங்களை வளர்த்துக் கொண்டீர்களே ஆனால் வாழ்க்கை மாறும். கல்வி என்பது நம்முடைய சிந்தனையை ஊக்குவிப்பது தான். எவ்வாறு சிந்திப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கல்வியின் உடைய நோக்கமே, கிளர்க்காக மாற்றுவதோ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற்றுவதோ நீதிபதியாக மாற்றுவதோ கல்வினுடைய நோக்கமல்ல, கல்வி தகுதியின் நோக்கம் தான் அது.

    நாம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும், திற ன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமைகளை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், ஒன்றியக்குழு தலைவர் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 12 பாட்டில்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி அருகே ஏரியூர் பகு தியில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 57) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
    • மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில் பி.காம்.சர்வதேச வணிகம், பி.ஏ.தமிழ் இலக்கியம், பொருளியல், வரலாறு, பி.எஸ்சி.ஆடை வடிவமைப்பு நாகரி–கம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர் சோ்க்கை முழுமை அடைந்துள்ளது.

    மற்ற பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அடுத்தக்கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படும். கல்லூரியில் வருகிற 22-ந் தேதி பாட வகுப்புகள் தொடங்குகிறது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இத்தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராசுக்குட்டி, ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது.
    • பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் தேர், சப்பரத்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்தல் உலா வந்தன. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது.

    அதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் சாமியும், அம்பாளும், பெருமாளும், இரு தட்டு வாகனத்தில் மேளதாளத்துடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர்.

    முன்னதாக தெப்பக்குளத்தை சுற்றி உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்து கொண்டிருந்தது. ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை உலா வந்தது. தெப்பம் மூன்று முறை உலா வரும்போது மரபு படி வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேல தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்த போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விழாவையொட்டி பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தொப்பக்குளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வர் வீரநாதன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, தி.மு.க. வார்டு செயலாளர் அழகு தாமோதரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வள்ளியம்மாள், வீரபத்திரப்பிள்ளை, கதிரேசன், வசந்தி, நீலாவதி, சுரேஷ், தாணுமாலய பெருமாள், காசி, ஆனி எலிசபெத், கலைச்செல்வி, சுசீந்திரம் நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரர் மோகன்தாஸ், சுசீந்திரம் கோவில் குத்தகைதாரர்கள் மூர்த்தி, வடிவேல் முருகன், பக்த சங்கம் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர்.

    தெப்ப திருவிழா முடிந்த பிற்பாடு சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • விக்கிபீடியா நிறுவனத்துக்கு ரஷியா கோர்ட்டு இதுவரை சுமார் ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
    • இது தொடர்பாக மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    உக்ரைன் போரில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை, ரஷிய ஆயுதப்படை போன்றவற்றை இழிவுபடுத்தும் கட்டுரைகள் உள்ளிட்ட 137 வகையான செயல்களை அந்த நாட்டின் அரசாங்கம் சட்ட விரோதம் என முத்திரை குத்தியுள்ளது. ஆனால் இந்த போருக்கு பிறகு ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை விக்கிபீடியா கொண்டுள்ளதாக அதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் ஒருபகுதியாக ரஷியாவால் சட்ட விரோதம் என முத்திரை குத்தப்பட்ட அந்த கட்டுரைகள் விக்கிபீடியா இணையதளத்தில் காணப்பட்டது.

    இதற்காக விக்கிபீடியா நிறுவனத்துக்கு ரஷியா கோர்ட்டு இதுவரை சுமார் ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அந்த கட்டுரைகளை விக்கிபீடியா நிறுவனம் இன்னும் தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என ரஷியாவின் ஊடக கண்காணிப்பாளர் ரோஸ்கோம்நாட்ஸோர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    • பயிர்சாகுபடி குறித்து பதிவு செய்யப்படுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

    விவசாயிகளின் விவரங்களுக்கு http://www. agrimark.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் கீழ் உள்ள இணையதளத் தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் இந்த இணையதளத்தில், அனைத்து சாகுபடி நிலவிவ ரங்களுடன் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், பயிர்சாகுபடி போன்ற அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    இதில் வருவாய்த்துறை, வேளாண்மை, தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, வேளாண் பொறியியல், உணவு வழங்கல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, விதைச்சான்றளிப்பு மற்றும் சர்க்கரை ஆகிய துறைகள் இணைக்கப்பட உள்ளன.

    இத்தளத்தில் பதிவு செய்வ தன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பயனாளி யின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக செல்லும்.இத்திட்டம் ஒற்றை சாளர தளமாக செயல்படுகிறது. ஒரே இடத்தில் பதிவு செய்வ தன் மூலம் விவசாயம் குறித்த அனைத்து துறைகளாலும் விவசாயிகளுக்கு தேவைப் படும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். ஒவ்வொரு முறையும் தனி யாக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

    இதுவரை அரசிடம் இருந்து பெற்றபயன்களை இனிமேல் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள லாம்.

    ஆதார்எண், அலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் விவசாயிகள் இணைக்கவேண்டும். மேலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் நிலப் பட்டா ஆவண நகலுடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக் கலை அலுவலரிடம் ஆவண நகல்களை ஒப்படைத்து இணையதளத்தில் தங்களது விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
    • ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த அவர், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணியில் விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வரும் நெய்மர், கடந்த 20-ந்தேதி லில்லே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது கணுக்காலில் காயம் அடைந்தார். அவரது காயத்தின் தன்மை குறித்து ஆராயப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காயம் காரணமாக நெய்மர், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மேலும் அவருக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணி உறுதிபடுத்தியது. இது தொடர்பாக அந்த அணி வெளியிட்ட அறிக்கையில் கணுக்காலில் காயம் அடைந்துள்ள நெய்மர் குறைந்தது 3 மாதங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது.

    அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர். ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர். அவர் பயிற்சிக்கு திரும்புவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும். அவருக்கு தோகாவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • பெண்ணிற்கு 18 வயதிற்குள் திருமணம் நடத்தினால் நடவடிக்கை
    • தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண தடை விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ஆரணி ஆர்டிஒ தனலட்சுமி, வருகைதந்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சங்கீதா வரவேற்று பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, ஆரணி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி, பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய வயது 18 ஆகும். 18 வயதிற்குள் உங்கள் ஊரில் எந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்தினால் உடனடியாக 1098-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவை ஆர்.டி.ஒ. தனலட்சுமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அருகே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவிகள் விடுதியில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி தீடீர் ஆய்வு செய்து, மாணவிகளிடம் குறைகள் கேட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த விடுதிக்காப்பாளர் லலிதா விடுதிக்கு வந்து ஆர் டி ஒ தனலட்சுமியிடம், விடுதியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து

    விளக்கம் அளித்தார். ஆர்.டி.ஒ. விடுதியில் சமையல் பதிவேடுகளை ஆய்வு செய்து தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ஆரணி தாசில்தார் ஜெகதீசன், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, ரமேஷ், பொன்னி, பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அர்ஜென்டினா அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
    • ஏராளமானோர் தங்களுடைய சிறப்பான கால்பந்து ஆட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

    கத்தாரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியை சத்குரு நேரில் சென்று பார்வையிட்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இரு அணிகளுக்கும் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அற்புதமான இறுதிச்சுற்று. இது கால்பந்துக்கு கிடைத்துள்ள வெற்றி! உண்மையிலேயே மிகத் திறமையாக விளையாடி அசத்திய அர்ஜென்டினா & பிரான்சு அணிகளுக்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.

    பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 'பெனால்டி ஷூட் அவுட்டில்' 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.

    உலக அளவில் அதிகப்படியான விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் உலக கோப்பை கால்பந்து நடைபெற்ற சமயத்தில், 'மண் காப்போம்'இயக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் செயலில் சத்குரு ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் #ScoreforSoil என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இதையடுத்து ஏராளமானோர் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிக்காட்டும் விதமாக, தங்களுடைய சிறப்பான கால்பந்து ஆட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

    உலகளவில் விவசாய நிலங்களில் கரிம சத்தின் அளவை குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதமாக அதிகரிக்க தேவையான சட்டங்களை அந்தந்த நாடுகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதே 'மண் காப்போம்' இயக்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.

    ×