search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்"

    • கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
    • அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • அரசு ஊழியா்களின் 40 மணி நேர பணிக்காலம் என்பது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சாா்பில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாமக்கல்:

    கடந்த 2009-ல் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் கோரிக்கையானது அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவால் ஏற்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் அரசு டாக்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு டாக்டர்கள் பணி நேரம் காலை 9 மணிக்கு மாறாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று சமீபத்தில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் டாக்டர்கள் சரியான நேரத்திற்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசு ஊழியா்களின் 40 மணி நேர பணிக்காலம் என்பது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சாா்பில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜி.அருள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தயாசங்கர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில், 80-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    ×