search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தணிக்கை"

    • போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.
    • கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22), சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதனை அவர்கள் விற்பதற்காக ெகாண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் நேற்று கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே செக்போஸ்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×