search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதி"

    • தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழா நடந்தது.
    • தினசரி உடையார்பாளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது.

    தினசரி உடையார்பா ளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

    விழாவை தொடர்ந்து நாளை ( சனிக்கிழமை) அரவாண் களப்பலியும், 6-ம் தேதி அன்று அர்ச்சுணன் தபசும் நடக்கிறது.

    7-ம் தேதி படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது.

    மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார்கள் செய்து வருகிறார்கள். 

    • முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
    • நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • 10 ஆண்டுக்கு பின் கடந்த 23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 ஆண்டுக்கு பின் கடந்த

    23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    இதனையடுத்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீரா டலும், சக்தி இறக்கம் மற்றும் காப்பு அவிழ்த்தலும் நடை பெற்றது. நேற்றிரவு, மகா பாரத இதிகாசத்தில் குறிப்பி டப் பட்டுள்ளபடி, திரவுபதி அம்மன் அவிழ்ந்த கூந்தல் முடிதல் மற்றும் தருமராஜா பட்டாபிஷேகமும், யாக பூஜை கணபதி ஹோமத்து டன் நடைபெற்றது.

    இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தர்ம ராஜரும், திரவுபதி அம்ம னும் மலர் மாலை அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முத்துக்குமாரசாமி படைக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது. அதிகாலை 4 மணிமுதல் தொடங்கி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முதற்கொண்டு கோவிந்தா, அரோகரா கோஷங்கள் முழங்க பக்தியுடன் தீ மிதித்தனர்.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலையில் அழகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    ×