என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் விலை உயர்வு"

    • நந்தினி ப்ளூ பால் பாக்கெட் தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

    கர்நாடகாவில் வருகிற 1-ஆம் தேதியில் இருந்து பால் விலை பாக்கெட்டுக்கு (1050 மி.லி.) 4 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது. கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தல் காரணமாக விலை உயர்த்தப்பட இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் கே.என். ரஞ்சனா கூறியதாவது:-

    பால் கூட்டமைப்பு லிட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து தரும்படி கேட்டது. இதனால் பால் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் 4 ரூபாயும், விவசாயிகளுக்குச் செல்லும்" என்றார்.

    கர்நாடகாவில் பேருந்து கட்டணம், மேட்ரோ ரெயில் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலை உயர்த்தப்பட இருக்கிறது.

    முன்னதாக, கர்நாடக மாநில பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக், பால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

    கடந்த வரும் ஒரு லிட்டர் பாக்கெட்டில் 50 மி.லி. பால் அதிகரிக்கப்பட்டு, 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 1050 மி.லி. கொள்ளளவு கொண்ட நந்தினி ப்ளூ பால் பாக்கெட் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
    • தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் இன்று (13-ந் தேதி) இரவு முதல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.

    அதன்படி நிறைகொழுப்பு பால் 500 மிலி 38 ரூபாயில் இருந்து 40.00ரூபாயாகவும், ஒரு லிட்டர் 71.00ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும், மற்றொரு வகை ஒரு லிட்டர் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், தயிர் 400 கிராம் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் உயர்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.

    ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

    ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்கள் அனைத்தும் ஹட்சன் போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களின் பாலினை பயன்படுத்தி வருவதால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் கோடை காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி சற்றே சரிவடையத் தொடங்கி இருந்தாலும் கூட பால் கொள்முதல் விலையிலோ அல்லது மூலப்பொருட்கள் விலையிலோ எந்தவிதமான உயர்வோ அல்லது மாற்றங்களோ இல்லாத இந்த காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
    • தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெரிய ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டியார்-சரோஜம்மாள் மகன் எஸ்.சதீஷ்குமார், இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் நாயக்கர்- பரிமளா மகள் எஸ்.ஹேமலதா ஆகியோரது திருமணம் இன்று காலை பெத்திகுப்பம் கேட் ஜே.எப்.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. பெரிய ஓபுளாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவருமான எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.

    பெரிய ஓபுளாபுரம் எஸ்.தமிழ்மணி, கொசவன்பேட்டை ஆர்.கே.ராஜேந்திரன், கொப்பூர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் தலையில் பல்வேறு சுமைகளை சுமத்தி உள்ளனர். குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் ஆட்சியாளர்கள் சுமத்தி உள்ளனர்.

    மேலும், தமிழகத்தில் குண்டு வெடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கோவை கார் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாகும். ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பால் விலை உயர்வு என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் த.மா.கா சார்பில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநில நிர்வாகிகள் திருவேங்கடம், ஆத்தூர் தாஸ், வட்டார தலைவர்கள் அசோகன், என்.ஆர்.கே.தாஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் செந்தில் குமார், சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாரவி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாத், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரமேஷ், ஆரணி பேரூர் தி.மு.க. செயலாளர் பி.முத்து மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15-ந்தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி நாளை (15-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    • மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
    • இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

    மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம்.

    மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்.

    இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.

    இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

    இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள்.

    தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார்.

    இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், திருவொற்றியூர் மேற்கு மண்டல் தலைவர் பாலு ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தண்டையார்பேட்டையில் மண்டலத் தலைவர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கொருக்குப்பேட்டை காரனேசன் நகரில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் போஸ்கோ மாணிக்கம், சக்திவேல், அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர ராஜ், கோவிந்த ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புறநகர் பகுதிகளான தாம்பரம், பம்மல், பெருங்க ளத்தூர், சிட்லபாக்கம், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருங்களத்தூர் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் மண்டல தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் பால் பாக்கெட்டை கீழே கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பழனி வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் வேதசுப்ரமணியம் தலைமையிலும் பம்மலில் வழக்கறிஞர் அலேக்ஸ் சுதாகர் தலைமையிலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல தலைவர் கணேஷ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊரப்பாக்கத்தில் மாவட்ட தலைவர் டி.ஜி.மோகனராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில துணை தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று காலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பால் விலை உயர்வை கண்டித்து அண்ணாமலை கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினர். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னையில் வெள்ளத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் முதல்-அமைச்சர் மனைவியுடன் சென்று லவ்டுடே படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குகிறார். மனைவியிடம் தனது செல்போனை கொடுக்க அச்சப்படும் நிலையில் தமிழகத்தையே கொடுத்து விட்டு நாள்தோறும் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

    ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கொசு வலை விற்பதற்கு சென்னையில் ஒரு மேயர். கொசு வலையை கூட நம்பி வாங்கி விடக்கூடாது. டெங்கு, மலேரியா வந்தால்கூட தி.மு.க. நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம். சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மாத மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை.

    விற்பனையாகாத பாலை காய்ச்சி வெண்ணையாக மாற்றி பொங்கலுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என அமைச்சர் நாசர் கூறி உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடியாக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது.

    16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழ்நாட்டில் இருந்து 26 எம்.பி.க்கள் பார்லிமென்ட்டுக்கு செல்வார்கள். கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    இந்நிலையில், பொன்னேரி அண்ணா சிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர துணைத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

    மேலும், பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதி கேசவன், பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் சர்மா, மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், தாட்சாயினி மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம்:

    பா.ஜனதா கட்சி சார்பில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசூர் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் வைத்திலிங்கம், கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பால் மற்றும் மின்சார விலை உயர்வை கண்டித்து பிறமொழி மாவட்ட தலைவர் மாரி கண்டன உரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் சிவபாலன், ஒன்றிய பொதுச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஹரி பாவாடைராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
    • பால் விலை உயா்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, சீனிவாசா ஆகியவை ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன.
    • பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

    சென்னை:

    அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன.

    ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றுக்கு தனியார் பால் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன.

    இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (20-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. (ஆவின் நீல நிற பாக்கெட் ரூ.40), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது.

    ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.20 அதிகமாகும். நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 ஆகும். தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது.

    தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    தனியார் பால் நிறுவனம் தன்னிச்சையாக விலை உயர்த்துவதை தடுக்க வேண்டும். பால் கொள்முதல், விற்பனை விலையை அரசு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
    • மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

    மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×