search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி"

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி கீழே இறங்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
    • ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சியில் பல்லவன் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் பயணி சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்திற்கிடையே ரெயிலுக்கு அடியில் சிக்கியவரை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.
    • நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன்.

    ராஜ்தானி விரைவி ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயிலில் உள்ள குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ராஜ்தானி விரைவு ரெயிலின் பரிதாப நிலை இது. ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது எங்களின் மகிழ்ச்சியான பயணத்தை கெடுத்துவிட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட பாத்ரூமின் நிலை மிக மோசமாக உள்ளது.

    நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன். ரெயில் சுத்தமாக இல்லை. ரெயில் பெட்டிகளுக்குள் அனுமதியில்லாமல் சிலர் பொருட்களை விற்கின்றனர். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கின்றனர். மொத்தத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    ரெயில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் எனது மகன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். பிரதமர் மோடி அவர்கேள தயவு செய்து இதை சரிசெய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவில், இந்திய ரெயில்வே துறை, ரெயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ரெயில்வே, உங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 


    • அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
    • சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

    வந்தே பாரத் ரெயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.

    அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர்.
    • இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது.

    குலாப்ஜாமுனில் உயிருடன் ஊர்ந்த கரப்பானப்பூச்சி.. பயணி வெளியிட IRCTC உணவு வீடியோ

     இந்திய ரயில்வேயில் IRCTC சார்பில் காண்ட்ராக்ட் மூலம் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. பயணி விரும்பினால் பயணத்தின்போது ஆர்டர் செய்து இருக்கைக்கே உணவை வரவழைக்கும் வசதி உள்ளது. ஆனால் உணவின் தரம் குறித்து பாசிட்டிவான ரிவியூவ்கள் வருவகிறதா என்பது கேள்விக் குறித்தான்.

    அந்த வகையில், கோராக்பூரில் இருந்து மும்பை லோகமான்யா திலக் டெர்மினல் செல்லும் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட IRCTC உணவுவில் வழங்கப்பட்ட இனிப்பு வகையான குலாப்ஜாமூனில் உயிருடன் கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    Cockroach in food byu/Aggravating-Wrap-266 inindianrailways

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர். இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது. உணவில் கிடந்த பூச்சியின் படத்தை பயணி ஒருவர் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவியது. இந்த சமபாவங்கள் தொடர்பாக IRCTC நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

     

    • இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
    • விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

    இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
    • குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.

    உடுமலை

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.

    தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.

    ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது.
    • பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது

    மார்த்தாண்டம் :

    மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு, கொல்லஞ்சி வழியாக இனையம் செல்லும் அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. கொல்லஞ்சி செல்லும் பாதையில் பஸ் சென்ற போது எதிரே லாரி வந்துள்ளது. எனவே பஸ்சை டிரைவர் சற்று ஓரமாக ஓதுக்கினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது. இதனால் பஸ் ஓடைக்குள் இறங்கியது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பினர்.

    விரிகோடு மீன்கடை முன்பு பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்காததால் பல்வேறு விபத்துகள் அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது. மேல விரிகோடிலிருந்து தபால் நிலையம் வரை கொஞ்ச தூரத்திற்கு மட்டும் சாலை போடாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் சாலை போடப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.

    பல்லடம், ஆக.22-

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

    பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    • ஒருவர் சிக்கினார்; மற்றொருவர் தப்பி ஓட்டம்
    • போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார்

    இரணியல், ஜூலை.20-

    கண்டன்விளையை சேர்ந்தவர் பிரபா. இவர் இன்று காலை மருத்துவ மனைக்கு செல்வதற்காக கண்டன்விளையில் இருந்து அரசு பஸ்சில் நாகர்கோவி லுக்கு புறப்பட்டு சென்றார். பஸ்சில் அவரது பின்னால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நின்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தோட்டியோட்டில் இறங்கினர்.

    இதையடுத்து தோட்டி யோட்டில் இருந்து பஸ் சென்றது. அப்போது பிரபா தனது பர்சு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பஸ்சை நிறுத்த கூறினார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்பு பிரபா பஸ்சில் இருந்து இறங்கி தோட்டியோடு பஸ் நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

    அப்போது இரு பெண்களில் ஒருவர் திங்கள் நகர் வந்த பஸ்சில் ஏறினார். இதனை அறிந்த பிரபா அங்கு நின்ற போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் அங்கு நின்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று பரசேரியில் பஸ்சை மடக்கி நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து விசா ரித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். விசார ணையில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 31) என்பதும், பர்ஸை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×