என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு மனுநீதி நாள் முகாம்"
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- 51 பயனாளிகள் பயணடைந்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள திருப்பனங்காடு கிராமத்தில் பில்லாங்கல், வெம்பாக்கம், திருப்பனங்காடு, சேலரி ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். சப் -கலெக்டர் அனாமிகா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனிவாசன், சங்கர், ஞானவேல், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 76 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த, நரசிங்கபுரம் ஊராட்சி கல்லரப்பட்டி கிராமத்தில் சிறப்பு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.5.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி வழங்கினார்.
இந்த முகாமில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் கலால் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, தாசில்தார் சம்பத், ஆலங்காயம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பூபாலன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் என். விநாயகம், சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுக்கா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மனுநீதி நாள் முகாம்
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சி.ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெய்சங்கர், துணைத் தலைவர் கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுகந்தி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமா சங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா, மின்வாரிய உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், டி.எம். பெரியசாமி, ஊராட்சி செயலாளர் சிவானந்தம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல துணை தாசில்தார் சுபிசந்தர் நன்றி கூறினார்.