என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டு வாடகை"
- வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாட்ரிட்:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
- ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது.
- முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது.
பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.
புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.
"ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார்.
சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது.
வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
- மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்காக செல்லும் நபர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை வீட்டு வாடகைக்கு செலவழிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விதா என்ற பெண் வக்கீல் எக்ஸ் தளத்தில் தனது வீட்டு வாடகை தொடர்பாக செய்த பதிவு வைரலானது. அதில், மும்பையில் ஒரு படுக்கை அறை, ஹால், சமையல் அறை கொண்ட வீட்டுக்கு வாடகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலுத்த வேண்டியது இருக்கும். சுதந்திரமாக இருப்பதற்காக உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. குடும்பத்துடன் இருப்பது நல்லது என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் மும்பையில் குறைந்த செலவு கொண்ட வீடுகளை பரிந்துரைத்தனர்.
ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
எனவே தானே, நவி மும்பை போன்ற பகுதிகளில் வாடகையில் வீடுகளை பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அந்த பெண்ணின் பதிவு விவாதமாகி உள்ளது.
- வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் 2 மாத வீட்டு வாடகையை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வீட்டின் உரிமையாளர் ஜெயேந்திர மானவவாலா, ராதே நகர் சொசைட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் கொடுத்துள்ளார்.
- அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது.
- திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது.
பெரு நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகும். அதுபோன்று பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், மிகச்சிறிய அளவு கொண்ட ஒரு அறையை காட்டுகிறார்.
அந்த அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது. திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது. அந்த அளவுக்கு மிகச்சிறிய தீப்பெட்டி வடிவில் இருக்கும் இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ.25 ஆயிரம் என கூறுகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வீட்டு வாடகை தொடர்பாக தங்களது கருத்தக்களை பதிவிட்டதால் அவரது இந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
- வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் ஜி.எஸ்.டி. கிடையாது.
புதுடெல்லி :
கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, வீட்டு வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதாக நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பதிவில், ''அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே, ''இனிமேல் வீட்டு வாடகை 18 சதவீதம் உயரும். ஏனென்றால், மோடி அரசு வீட்டு வாடகை மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கிடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், இக்குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி. கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால்கூட ஜி.எஸ்.டி. கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.