search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாலர்"

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
    • ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

    அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.

    இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது.
    • வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும்.

    திருப்பூர் :

    நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ளது.நாட்டில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டு(2022-23) துவக்கம் முதல் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் இருந்தது. டாலர் மதிப்பில் கணக்கிடும்போது ஏப்ரல் - 21.44 சதவீதம், மே - 27.85 சதவீதம், ஜூன் - 49.82 சதவீதம் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. நிதியாண்டின் முதல் காலாண்டு வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவந்த ஏற்றுமதி வர்த்தகம், முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.388 பில்லியன் டாலராக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஜூலை மாதம் 1.381 பில்லியன் டாலராக 0.60 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூபாயிலும், டாலரிலும் வளர்ச்சி நிலையிலேயே காணப்பட்டது. ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, கடந்த ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதி 10,347.10 கோடி ரூபாயாக இருந்தது.

    கடந்த ஜூலை மாத ஏற்றுமதி வர்த்தகம் 10,992.26 கோடியாக 6.17 சதவீதம் உயர்ந்திருப்பது போல் தெரிகிறது. இதை வளர்ச்சியாக கருதமுடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 74.55 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு நடப்பு ஆண்டு 79.60 ரூபாயாக 6.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனாலேயே டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ள வர்த்தகம் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது உயர்ந்தது போன்று தெரிகிறது. இம்மாத இறுதி முதல் வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும். ஜூலையில் ஏற்பட்டுள்ள அரை சதவீதத்துக்கும் அதிகமான இந்த வர்த்தக சரிவு வரும் மாதங்களில் தொடர்ந்துவிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    ×