search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரி மணல்"

    • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
    • சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி - கொக்கலாடி கிராமமக்கள் தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி கிராமத்தில் உள்ள சித்தேரியில் மண் அள்ளு வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.
    • ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆமூரில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆமூர் ஏரி ஒட்டிய பகுதியில் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை போடப்பட்டு வருகிறது.

    இதற்காக இப்பகுதியில் உள்ள கோரைகளில் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அரசு கூறி உள்ள மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20 அடிக்கும் மேலாக கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்கள் கோரையை முற்றுகையிட்டு லாரிகளை மடக்கி நிறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு பொன்னேரி காவல்துறையினர் விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதானம் பேசி கோரை உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்த அளவைவிட பள்ளம் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • ஏரியிலிருந்து அரசு விதிகளுக்குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
    • பேச்சுவார்த்தைக்கு வந்த எம்.எல்.ஏ- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில், அரசு திட்டங்களான விழுப்புரம் நாகை நான்கு வழி சாலை, காரைக்கால்-பேரளம் அகல ெரயில்பாதை திட்டம், கேந்திரவித்யாலயா உள்ளிட்ட பணிகளுக்காக, ஏரியிலிருந்து அரசு விதி களுக் குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, அரசு விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப் பட்டு வருவதாகவும், சில சமயம் மேற்கண்ட அரசுத் திட்டங்களை தவிர, தமிழகத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவ தாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்த அளவுக்கு அதிகமான மணல் கொள்ளையை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்த நிலையில், அளவுக்கு அதிக மான மணல் எடுப்பது நிறுத்தப்படவில்லை.

    தற்போது, குறுவை நடவு நடவுள்ள நிலையில், ஏரியில் மிக ஆழமாக மண் எடுப்பதால், நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தால், சம்பா நடவு கேள்விக் குறியாகும் என, ஏராளமான விவசாயிகள், கிராம மக்கள், ஏரியிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரி களை நேற்று சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், நல்லம்பல் ஏரிக்கு செல்லும் வழியை யும் இரும்புத் தடுப்புகளால் தடுத்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விபரம் அறிந்த மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), தாசில்தார் பொய்யாத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத தால், தொகுதி எம்.எல்.ஏ சிவா சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ சிவா மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரி மகேஷ் (நீர்வளம்) ஆகி யோரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு மணல் கொள்ளையை தடுக்கா ததற்கு கண்டன கோஷம் எழுப்பியதோடு, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ சிவா பேசியதாவது:-

    நல்லம்பல் ஏரியில் வயல் மட்டத்திலிருந்து அளவெ டுத்து முறைப்படி மணல் அள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப் பில்லை. மணல் அள்ளும் இடங்களில் ஆழம், அகலம், நீளத்தை அளந்து வரு கிறோம். மண்ணை அள்ளிய பிறகு பள்ளங்களை ஏரியின் மற்ற பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சமன் செய்வோம். என்றார். இதில் உடன்பாடு ஏற்ப டாததால், மக்கள் சிறை பிடித்த லாரிகளை விடு விக்க முடியாது என தொடர்ந்து போராடினர். இதனால் அங்கு அசம்பா விதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    • சின்னசேலம் அருகே ஏரியில் மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • 2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள இந்திலி ஏரியில் மணல் திருடுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் உடனடியாக இந்திலி ஏரிக்குச் சென்ற போலீசார் மணல் திருடிய ரமேஷ் த/பெ கருப்பன் தெற்கு காட்டுக்கொட்டாய் பொறப்படாக்குறிச்சி சேர்ந்தவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். இதில் டிப்பர் லாரி 2 யூனிட் ஏரி மண்ணை எவ்வித அரசு அனுமதியோ உத்தரவோ இல்லாமல் திருட்டுதனமாக ஏற்றி வந்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து வாகனத்தை கைப்பற்றினார்கள்.

    • ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
    • சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக தங்களது கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    அதில் விவசாயிகள் நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 டிராக்டர் ரோடுகளும், வீட்டு பயன்பாட்டிற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தொழில் செய்ய 20 டிராக்டர் லோடு அளவிற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விலை இல்லாமல் பெற்று பயன் அடையலாம் என கூறப்பட்டது. மேலும் இவ்வாறு மண் அடிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டா ட்சியரிடம் அனுமதி பெற்று மண் அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வண்டல் மண் அடிக்க ஒரே ஒரு விவசாயி மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் சமூக விரோதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் இரவு நேரங்களில் வருவாய்துறையினரிடம் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கிராவல் மண் அடித்து வருகின்றனர். இவ்வாறு கிராவல் மண் அள்ளும் சமூக விரோதிகள் ஏரி பகுதியில் ஊருக்கு அருகே உள்ள பகுதியில் அதிக ஆழமாக அள்ளுவதாகவும், இவ்வாறு கிராவல் மண் அள்ளுவதால் மழை காலங்களில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் கிராவல் மண்ணை கள்ளக்குறிச்சி, உலகங்காத்தான், தச்சூர் ஆகிய பகுதிக்கு எடுத்து ச்சென்று விற்பனை செய்வதாகவும், மலைக்கோட்டாலம், விளம்பாவூர் பகுதியை சேர்ந்த சிலர் செங்க ல்சூலைக்கு அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஏரியில் அனுமதியின்றி 1000- க்கும் மேற்பட்ட நடை கிராவல் மண் மற்றும் வண்டல் மண்ணை சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

    இவ்வாறு ஏரியில் சுமார் 10 அடி ஆழம் வரை மண் எடுப்பதாலும், ஏரியில் பல்வேறு இடங்களில் மண் எடுப்பதாலும் ஆடு, மாடுகளை கூட ஏரியில் மேய்க்க முடியாமலும், ஆடு மாடுகள் வந்து செல்லக்கூட வழி இல்லாமல் அவதிப்படுவதாகவும், ஏரியின் அமைப்பு உருக்குலைந்து காணப்படு வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் அனுமதியின்றி மண் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும், இதனால் அதிகாரிகள் சமூக விரோதிகள் மண் அடிப்பதை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு பெரிய ஏரியில் மணல் கொள்ளை தொடர்ந்தால் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து இதுவரை எத்தனை பேர் வண்டல் மண் அடிக்க அனுமதி பெற்றுள்ளனர், இந்த ஏரியில் இருந்து மண் வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறதா? ஏரியில் எவ்வளவு மண் அள்ளப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளும் பள்ளத்தால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? சமூகவி ரோதிகள் திருட்டுத்தனமாக மண் அள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×