search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை மேயர்"

    • துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல்.
    • தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது.
    • நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது, பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.
    • மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி செம்பருத்தி நகரை சேர்ந்தவர் சிவாஜி. பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துகலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் 20 அடி அகல பொதுரோட்டை 80-ம் வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிள்ளார். இதற்கான ஆவணங்களை பத்திர பதிவு அலுவலகத்தில் சரிபார்த்த போது, சுப்பிரமணியன் என்பவரிடம் நாகராஜன் பொது அதிகார ஆவணம் மூலம் 2176 ச.அடி நிலம் வாங்கி உள்ளார்.

    அதன் பிறகு மாநகரா ட்சியின் முறையான அனுமதி பெறமால் 544 ச.அடி வீதம் 4 பேருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளார். இதில் 4-வது நபராக நாகராஜன் மனைவி செல்வராணி பெயரில் கிரையம் செய்து தரப்பட்டு உள்ளது.

    அங்கு 20 அடி அகல பொதுப்பாதை செல்வதாக பத்திரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நாகராஜன் கீழ்புறம் உள்ள ரோட்டை மறைத்து, 10 அடி இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார். அதேபோல மேலும் ஒருவரும் 10 அடி பொது பாதைக்கு விட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

    மாநகராட்சியில் துணை மேயர் பதவியில் இருந்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சிக்கு செந்தமான ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வரும் நாகராஜன் மற்றும் அவராது மனைவி செல்வராணி மீது நடவடிக்கை எடுத்து, மேற்படி அக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதுப்பா தையை ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×