search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணிவிப்பு"

    • கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்த இடத்தில் அவர்களுக்கு மலர் அணிவித்தனர்.
    • பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அஞ்சலி.

    தஞ்சாவூர்:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஜெபித்து மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக வந்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்களும் கல்லறைகளுக்கு சென்று ஜெபித்தனர்.

    இதே போல் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்; சொக்கநாதபெருமானுக்கு வைர நெற்றிப்பட்டை தீபாவளி அன்று அணிவிக்கப்படுகிறது.
    • வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீதீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) ஐப்பசி பூரம் நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் உச்சிகாலத்தில் ஆலவட்டத்துடன் உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேருவார்.

    வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடக்கிறது. 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் சுற்றி வந்த பிறகு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச்சாவடி சேருவார்.

    29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் வௌ்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வீதி உலா நடைபெறும்.

    ஐப்பசி விழாவின் 6-ம் நாளான 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிசப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கந்த சஷ்டி உற்சவம் நடைபெறும். 31-ந் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வௌ்ளிக்கவசம் மற்றும் பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் ேததி முதல் 8-ந் தேதி வரை பவித்திர உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். 8-ந் தேதி உச்சி காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும்.

    ஐப்பசி மாத திருவிழாவை யொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் ேததி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், துணை ஆணையர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பெருந்தலைவர் காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி சிலை ஆகியவைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தஞ்சையில் பல்வேறு இடங்களில்இனிப்புக்கள் வழங்கப்பட்டு மறைந்த தேசியத் தலைவர்கள் வடக்குவீதி மற்றும் தஞ்சைமாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்திசிலைகள், நேருசிலை கீழவாசலில் உள்ள பெருந்தலைவர்காமராஜரின் சிலை மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்துஇனிப்புக்கள் வழங்கினார்முன்னதாக ஐஎன்டி யூசி மாவட்டபொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்டதுணை த்தலைவர் வக்கீல் கோ.அன்ப ரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கண்டிதம்பட்டு.கோவிந்தராஜ் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபுமண்கொண்டார் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்சத்தியமூர்த்தி வட்டாரத்தலைவா; ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியி ல்மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா வடக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் தலைவர்ரமேஷ்சிங்கம் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலை வர்இளையபாரத்ர மாநகர மாவட்ட கோட்டத்த லைவர் சதா வெங்கடேசன்வழக்கறிஞர்கள்சந்திரமோகன் ஆலக்குடி ராமலிங்கம் கவி. கோவிந்தராஜன்வீணை.கார்த்திகேயன் வரகூர் மீசைமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×