என் மலர்
நீங்கள் தேடியது "சாராய விற்பனை"
- சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது வெவ்வேறு இடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
- போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சங்கராபுரம், மே.20-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- மரக்காணம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.
- சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
- ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
- சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.
இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இந்த கொலை சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முன்னதாகவே புகார் அளித்தும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடலூர் அருகே சாராய விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
- சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று சோதனை செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது60 ) சாராயம் விற்பனை செய்துவருவதாக தொடர்ந்து புகார் வந்தது.அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது நாகம்மாள் விற்பனைக்கு வைத்து இருந்த சாராயம் கைப்பற்றப்பட்டு அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- சங்கராபுரம் பகுதியில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
- 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிரு ந்தனர். தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 40), மற்றும் வீட்டின் அருகில் சாராயம் விற்ற நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள் (34), மொட்டையம்மாள் (58), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (54) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களை கைது செய்து அவர்களிடம் 41 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதே போன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் (48), கொடியனூர் வெள்ளையன் (40), சின்னபுளியங்கொட்டை பிரபு (31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது.
- சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளநத்தம் ,பாண்டியன் குப்பம், சமத்துவபுரம், அம்மையகரம் ,சின்னசேலம், தாகம் தீர்த்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது. இதன்காரணமாக பல்வேறு குடும்பத்தினர் மன உளைச்சலால் நிம்மதி இன்றி இருந்து வந்தனர். எனவே கள்ளச்சாரயத்தை தடுக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கள்ள சாராயம் விற்பனை குறித்து செய்திகள் வெளியானது.
எனவே சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார். அதன்படி சின்னசேலத்தில் பணிபுரிந்த நாராயணசாமி, தேவமூர்த்தி, தேவேந்திரன், ராபர்ட் ஜான், ஆகியோர்களை கள்ள க்குறிச்சி, கச்சிரா யபளையம், பகண்டை எக்ஸ் கூட்ரோடு ஆகிய போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ் குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ராஜேந்திரன், கோவிந்தராஜ், சேட்டு, நந்தகோபால், ஆறுமுகம் உள்ளிட்டோர் கச்சிராய பாளையம், திருநாவலூர், உளுந்தூ ர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்