என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விற்றால்"
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம்.
- இந்த ஆய்வில் ‘ரேட்டால்” மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த 'ரேட்டால்" என்ற எலி மருந்தானது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக்கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். 'ரேட்டால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் 'ரேட்டால்" மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'ரேட்டால்" ஈரோடு மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கான கைபேசி எண்கள் வேளாண்மை உதவி இயக்குநர்(தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) - 88702 88416, அம்மாபேட்டை- 99526 97911, அந்தியூர் - 89734 54034 , பவானி - 94430 30302, பவானிசாகர் - 94451 84161,
சென்னிமலை - 94881 40401, ஈரோடு - 99651 29925, கோபி - 99949 72470 ,கொடுமுடி - 99764 80379 , மொடக்குறிச்சி - 99764 95153, நம்பியூர் - 73735 10591 , பெருந்துறை - 96595 47577, சத்தி - 83445 32481 , தாளவாடி - 63823 42149, டி.என்.பாளையம் - 80752 41292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கன்னியாகுமரி:
சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
- அனுமதி இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
- கடைகளில் நேரில் ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார் பாளையம் 2கோட்டங்களும், அரியலூர் செந்துறை ஜெய–ங்கொண்டம் ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களும், 6 ஒன்றியங்களும், 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை கொண்டு–ள்ளது.
தீபாவளி பண்டிகையை–யொட்டி அரியலூர் மாவட்ட–த்தில் பட்டாசு விற்பனை தொடங்கி விட்டது. ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிலர் அனுமதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் பட்டாசு விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் அரிய–லூர் நகரில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வருவாய் ஆய்வா–ளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் ஆகியோர்கள் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு உபகரண–ங்கள் இருக்க வேண்டும், மணல்வாளி–களை வைத்திருக்க வேண்டும், தீயணைப்பு கருவிகள் வை–த்திருக்க வேண்டும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆர்டிஓ எச்சரித்துள்ளார்.
- கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 'பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்