என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாராய வேட்டை"
- 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
- 14 தனிப்படையினர் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் காவல் நிலைய போலீசார் மட்டு மின்றி 14 தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், மாவட்டத்தில் உள்ள அல்லேரி, சாத்கர், ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த மே 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்பட்ட சாராய வேட்டையில் மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவான 112 பேரை தேடும் பணி தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் கூறும்போது:-
"வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளில் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டுவந்த 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.
சாராய தடுப்பு வேட்டையின் மூலம் சுமார் 56 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 13 ஆயிரத்து 858 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 372 மதுபாட்டில்கள், சாராய ஊறலுக்கு பயன்படும் வெல்லம் சுமார் 5 ஆயிரத்து 110 கிலோ, வெள்ளை சர்க்கரை சுமார் 870 கிலோ, வேலம் பட்டை சுமார் 700 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
23 வாகனம் பறிமுதல்
சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். வரை
சாராய தடுப்பு வேட்டையின் போது சுமார் ரூ.34 ஆயிரத்து 500 மதிப்பிலான சுமார் 3.5 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரும் வரை சாராய தடுப்பு வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சாராய தடுப்பு வேட்டையின் ஒரு பகுதியாக சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்துவோருக்கு மறுவாழ்வு நிதி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது மனம் திருந்திய முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகள் 219 பேருக்கு தலங் ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி வழங்க மாவட்டடி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
- போலீசார் ரெய்டு நடத்தியதில் சிக்கினர்
- 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சந்தவாசல் கண்ணமங்கலம் களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ரெய்டு நடத்த உத்தரவிட்டனர்.
ஆரணி சரக டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக சாராய ரெய்டு நடத்தியதில் ஆரணி தாலுகாவில் மீனா, வேண்டா, கிருஷ்ணமூர்த்தி, ராமதாஸ், பாக்கியராஜ், பாபு, சந்தவாசல் பகுதியில் சாந்தி வனிதா கண்ணமங்கலம் பகுதியில் விஜயகாந்த், ரேவதி உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சுமார் 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
- 7 ஆயிரம் லிட்டர்சேவ சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் கலால் இன்ஸ்பெக்டர் பேபி, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழநிமுத்து, அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையாக கொண்ட குழுவினர் சாராய வேட்டை நடத்தினர். அல்லேரி, வாழைப்பந்தல், பீஞ்ச மந்தை, ஜார்தா ன்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட மலை பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்தனர்.
அப்போது, அல்லேரி மலைப்பகுதியில் காட்டுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5ஆயிரம் லிட்டர் சாராய ஊரலையும் ஜார்தான்கொல்லை பகுதியில் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல், குருமலையில் 1000 என மொத்தம் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவாறு நொறுக்கி தள்ளினர்.
இதுகுறித்து அணைக்கட்டு, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்
- விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அம்பேத்கர் நகர் கலைவாணன் (47), கண்டரக்கோட்டை சுரேஷ் (36) ஆகியோரையும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகர் முரளி ( 38 ), விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர்.
- 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
கடலூர்:
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது காட்டு வேகாக்கொல்லை சிவன் கோவில்அருகில்அருகில்விற்பனைக்காக இருந்த 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்அவர்பண்ருட்டி நல்லூர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தயாளன்(36)என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கல்வராயன் மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து பதிக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் போலீ–சார் கண்டுபிடித்து அழித்தனர்.
- போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் சாராய வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை 171 மலை கிராமங்களும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.
இந்த கல்வராயன் மலை–யில் கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாகவும் இந்த கல்வராயன் மலை உள்ளது. வனப்பகுதி நீரோடை–களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோ–திகள் கள்ளச்சா–ராயம் காய்ச்சி, அவற்றை கல்வராயன்மலை அடி–வாரப் பகுதியான சின்ன–சேலம், கல்லாநத்தம் வழியா–கவும், அதேபோல் சங்கராபுரம், மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி வழியாகவும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்க–ளுக்கும் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இவற்றை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு பகலவன் தீவிர முயற்சி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் சின்னசேலம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப் பட்ட வீடியோ சமூக வலை–தளங்களில் பரவியதின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் கூண்டோடு இடம் மாற்றம் செய்யப் பட்டார்கள். அது மட்டுமின்றி 5-க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு போலீஸ் நிலை–யங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு எல்லாத்துக்கும் மூலகாரணமாக இருக்கும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுத்து நிறுத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சா–ராயம் இருக்காது என்ற ஒரு நோக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை யில் தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசே–கரன் சங்கராபுரம் சப்-–இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி, கச்சிரா–யப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, என 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வ–ராயன் மலையில் கள்ளச்சா–ராயத்தை ஒழிக்கும் நட–வடிக்கையில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற–னர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று கல்வராயன் மலை–யில் உள்ள சேத்தூர், ஆரம்பூண்டி, மேல்பாச்சேரி, கிணத்தூர், கெடார் என பல்வேறு கிராமங்களில் உள்ள வனப்பகுதி களுக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சு–வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதற்கு தயாராக லாரி ட்யூப்களில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் போலீ–சார் கண்டுபிடித்து அழித்த–னர். இந்த அதிரடி நடவடிக்கை–யால் சாராய வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். மலை–வாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்