search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்"

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைநேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக எழுதி அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத் தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநி யோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.

    இதில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்து ரைத்து தீர்வு காணவும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொட்டியம் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெறுகிறது.
    • தொட்டியம் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தொட்டியம் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் தொட்டியம் வட்டாரத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் தொட்டியம் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×