என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ உபகரணங்கள்"

    • வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது
    • மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் அஜயா மஞ்சு தலைமையில் செவிலியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன், சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வடசேரி துருவா கேபிள் டிவி உரிமையாளர் ஆர். ராஜாமணி, தேசிய தடகள உயரம் தாண்டுதல் கோல்டு மெடல் ஆறுமுகம் பிள்ளை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக குடும்ப நல ஆலோசனை மைய தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 6 அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள நிலையில் அதில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்ந்த 6 அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மற்ற மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அமுத வள்ளி உள்ளிட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களும் அறிவு ரைகளும் வழங்கப்பட்டது.

    • அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி அளித்தனர்.
    • உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நமக்கு நாமே திட்ட ஆலோசனைக் கூட்டம் வனம் இந்தியா அறக்கட்டளை கூட்டரங்கில் திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகரத்தின் முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை. சுந்தரராஜன், செயல்தலைவர் பாலசுப்பிரமணியம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க காரணம்பேட்டை மற்றும் 63. வேலம்பாளையம் பகுதி கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர். இதே போல அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கமும் உறுதி அளித்தனர். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அரசு சுமார் 5 ஏக்கர் நிலம் வழங்கினால் அந்த இடத்தில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர பல்லடம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உறுதியளித்தனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    • ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவு, முதுகு தண்டுவட பிரிவு, நரம்பியல் பிரிவு மற்றும் பங்கர் என்னும் புற்று நோய் கண்டறியும் மையம் அமைய இருக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோருடன் 2 மணி நேரம் ஆய்வு செய்தேன். ஆஸ்பத்திரியில் 204 மருத்துவ பணியிடங்களில் தற்போது 193 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மேலும் மருத்துவ உபகரணங்கள் வேண்டும் என கேட்டார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்சாதன வசதிகள் உள்பட பல உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான தானியங்கி ஆட்டோ கிளேவ் எந்திரம், துணிகளை உலர வைக்கும் எந்திரம் ரூ.75 லட்சத்தில் வாங்கி தரப்பட இருக்கிறது.

    நியூராலஜி பிளாக் பணிகள் ரூ.6.4 கோடியில் முடிந்துள்ளது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 50 தானியங்கி மருத்துவ படுக்கை ரூ.23.75 கோடியில் அமைய உள்ளது. குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு பணி மேற்கொண்ட போது இங்கு புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அறிவித்த நிதி நிலை அறிக்கையில் கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கர்ப்பப்பை, வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இங்கு கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பங்கர் அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் வேலை நிறைவடையும். அதன் பின் டெலிகோபால்ட் என்ற கருவி அமைக்கப்பட உள்ளது. எனவே அடுத்த மாதம் புற்றுநோய் கண்டறியும் மையம் கட்டுமான பணிகளை நானே தொடங்கி வைக்க இருக்கிறேன். புற்று நோயானது முதல் கட்ட பரிசோதனையில் கண்டறிந்தால் எளிதில் காப்பாற்றலாம். 3, 4 நிலைகளை கடந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டு விட்டது. ஒரு மருத்துவரின் மனைவி பி.இ சிவில் படித்திருக்கிறார். இங்கு சிவில் தேவை இல்லை என்பதால் பணி வழங்கப்படாமல் உள்ளது. குமரி மாவட்டத்தில் எலிக்கடிக்கு, நாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் கொடுத்த டிஸ்சார்ஜ் சம்மரியில் குழந்தைக்கு நாய் கடித்ததாக பதிவு இருந்தது. பாதுகாப்புக்காக நாய்க்கடி மருந்து செலுத்தினர். அதன்பிறகு கேரளாவில் தனியார் மருத்துமனையில் இல்லாத நாய் கடிக்கு சிகிச்சை அளித்ததாக அங்குள்ள மருத்துவரையும், அந்த மருத்துவமனையையும் புரமோட் செய்வதற்காக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் அந்த தகவலை பரப்பினர். அந்த செய்தியை பார்த்துவிட்டு எதிர்கட்சி தலைவர் வேலை மெனக்கெட்டு அறிக்கை விட்டார். தனியார் மருத்துவமனை தவறு செய்திருக்கிறது.

    அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறையிடமும் தெரிவித்துள்ளோம். அதற்கு நான் பதிலும் கொடுத்துவிட்டேன். அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும் பாம்புகடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2½ ஆண்டுகளாக நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ், சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிடம் மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
    • குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடந்தது

    திருவட்டார் :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பேசில்துரை, மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், துணை தலைவர் டாக்டர் அஜித் ஜித், துணை அமைப்பாளர் டாக்டர் மார்பல்சிங், தொகுதி துணை அமைப்பாளர்கள் டாக்டர் பெலக்கில்ராஜ், சேம்ராஜ், கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 150 கர்ப்பிணி தாய்மார்கள் பயனடைந்தனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ரவி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மலர்மன்னன், மாவட்டம் மருத்துவர் அணி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
    • கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும் சேதம் அடைந்ததால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இந்த புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்ற போது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள 7 மாடிகளை கொண்ட ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் ரூ.84 கோடியே 17 லட்சத்தை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்த நிதியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துக்கு வழங்கினார்கள்.

    பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் உதவி மையம், வழிகாட்டி தகவல் மையம், சிற்றுண்டி அறை, காத்திருப்போர் அறை என புதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தரத்துக்கு உயர்த்தி உள்ளார். வடசென்னை வளர்ச்சி என்ற வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு வழிகளில் நிதி உதவி அளித்து வருகிறது.

    அந்த வகையில் இந்த மருத்துவமனையின் கட்டமைப்புக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.84 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிதி ஆதாரம் ஒரே பணிக்காக அளிக்கப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மார்ச் 1-ந் தேதி முதலமைச்சரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி வருகிற 28-ந் தேதி இந்த ஆஸ்பத்திரி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா பருவ காலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.

    தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ச்சியாகவே கட்டுக்குள் உள்ளன.

    டெங்கு பாதிப்பு 2 முறை அதிக அளவில் இருந்தது. 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இது தான் அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.

    வடசென்னைக்கான வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகளின் சார்பிலும் தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரி 860 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்து வமனையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இது வடசென்னை பகுதி மக்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். இந்த ஆஸ்பத்திரிக்கு 102 டாக்டர்கள், 236 நர்சுகள், 79 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 240 தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    மேயர் பிரியா, சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவ லர் சிவஞானம், தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் அருண், தம்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×