search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கம்பி"

    • பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    • மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பகுதியில், பொது மக்களின் தேவைக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை லேசான காற்று அடித்தது. அப்போது புதூர் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செல்லும், உயர் மின் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார், விரைந்து சென்று மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தில், யாரும் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.
    • அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமங்கலம் கிராம த்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் விவசாய வேலை செய்து வருகி றார். இவர் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று விட்டுள்ளார். மீண்டும் மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுமங்கலம் சுடுகாட்டின் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக மின்கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது. இதை பார்த்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் ஆனவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததால் அடுத்தடுத்து 3 பேர் பலியாகினர்.
    • கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சிக்குட்பட்ட ஒடச்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது55). இவரது மகன் பெருமாள் (33). இவருக்கு திருமணமாகி மோகனா என்கிற மனைவி உள்ளார். பெருமாளின் அத்தை சரோஜா (70).

    இந்த நிலையில் நேற்று மாலை காரிமங்கலம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.

    அப்போது மாதம்மாள் வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு துணி காய வைக்க ஒரு கம்பி கட்டியுள்ளார்.

    இன்று காலை அந்த கம்பியில் ஈர துணியை மாதம்மாள் காய போட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.

    இதனை பார்த்த அருகில் இருந்த பெருமாள், சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பண்ணந்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மின்சாரம் தாக்கி இறந்த மாதம்மாள், பெருமாள், சரோஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது .
    • முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கி ன்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வ போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகு தியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது . தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்து வதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

    யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்கம்பிகளில் முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • மின் கம்பிகள் புளிய மரத்தின் கிளையில் ஊடுருவி செல்கிறது.
    • எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 3-வது வார்டு குட்டைக்கரை பகுதியில் புளிய மரத்தில் ஊடுருவி பழுதடைந்து காணப்படும் மின்கம்பியை ஆபத்து ஏற்படும் முன் பென்னாகரம் மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குட்டைக்கரை பகுதிகளில் மின் கம்பம் வழியாக செல்லும் மின் கம்பிகள் புளிய மரங்களில் ஒட்டி உராய்ந்தும்,ஒரு இடத்தில் புளிய மரத்தின் கிளையில் ஊடுருவியும் செல்கிறது.

    புளிய மரங்களில் உராய்ந்து செல்லும் மின் கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த புளிய மரத்தின் கீழ் பகுதியில் மினி டேங்க் உள்ளதால், ஏராளமான பெண்கள் குழந்தைகள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புளிய மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்தாலோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்தாலோ எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து பெண்ணாகரம் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
    • சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(28) கட்டிடத் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரோட்டோர மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பாலமுருகன் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் இவர் மீது மோதாமல் சென்றன.

    மின் கம்பி கழுத்தின் பின்பகுதி மற்றும் முன்பகுதியில் சிராய்த்து பலத்த காயம் ஏற்பட்ட பாலமுருகனை அக்கம்- பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற நிலையில்,அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.இது குறித்து பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை, மின்வாரிய அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்யாமலும், உரிய காலத்தில் அவைகளை மாற்றாமல் இருந்ததுமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என்றும் தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர்.
    • முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் இன்று காலை மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து ஓடினர் இதனை தொடர்ந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணத்தினால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பியை மீண்டும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாகனங்க ளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது . இதன் காரணமாக மிக முக்கியசாலையாக கருத ப்படும் பகுதியில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே தற்போது மின் கம்பிகள் பழுது ஏற்பட்டு தளர்ந்து உள்ளது . இது போன்ற தொடர்ச்சியாக மழை பெய்யும் சமயங்களில் மின்சாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு பகுதியாக உள்ள மின்கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து இது போன்ற மின்கம்பி அறுந்து விழும் நிகழ்வுகளை தவிர்க்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ம் பேரிடர் மாவட்டமாக உள்ளதால் எந்நேரத்திலும் மழை அதிகளவிலும், காற்று சூறாவளி காற்றா கவும் மாறக்கூடிய அவல நிலையில் உள்ள பகுதியாக இருப்பதினால் மின்சாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்கள் தொடங்கு வதற்கு முன்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் திடீரென்று மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×