என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கான்கிரீட் தளம்"
- தலைவர் லில்லி பாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்
- சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது
திருவட்டார் :
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலமோர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கைகாட்டி பிருந்தாவனம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து உள்ளது. இதை சரிசெய்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பனிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சாலையை சரிசெய்வதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டபோது இந்த சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. சாலையை சரி செய்ய தமிழக வனத்துறையை சார்ந்த முதன்மை தலைமை வனபாதுகாவலர் சீனிவாஸ் ஆர் ரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை அவர் பரிசீலனை செய்து அனுமதி அளித்தார். இதையடுத்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏசுராஜ், ஊராட்சி மன்ற செயலர் சாமுவேல், கவுன்சிலர்கள் சந்திரா ஜெயசீலன், ராணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம்
நாகர்கோவில், செப்.13-
நாகர்கோவில் மாநகராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட கோட்டவிளை பகுதியில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம், 18-வது வார்டு பிளசன்ட் நகரில் ரூ.21 லட்சத்தில் தார் சாலை, 4-வது வார்டு அசோக் கார்டனில் ரூ.5 லட்சத்தில் தார் சாலை, 17-வது வார்டு குழந்தை யேசு கோவில் முன்பு உள்ள சாலையில் ரூ.10 லட்சத்தில் கருந்தளம், 17-வது வார்டு அருள்நகரில் ரூ.20 லட்சத்தில் கருந்தளம், 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் அமலசெல்வன், கவுசிகி, வீரசூரபெருமாள், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கருங்கல் தபால் நிலையம் - கூனாலுமூடு சாலையில் நடைபெறுகிறது
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி :
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல் தபால் நிலையம் - கூனாலுமூடு சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இச்சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாமல் காணப்பட்டது. இதனால் இந்த சாலையை கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க பேரூராட்சி நிதியிலிருந்து ரூ.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பேரூராட்சி தலைவர் சிவராஜ் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், வார்டு உறுப்பினர்கள் டெல்பின், ஜெயக்குமார், வழக்கறிஞர் ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோசிங், ஆஸ்டின், கருங்கல் பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், கருங்கல் பேரூர் தி.மு.க. செயலாளர் அருள்ராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும்.
- கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கயம் :
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராம ஊராட்சி வரை உள்ளகீழ்பவானி பாசன கால்வாயில் ரூ.900 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் கான்கிரீட் தளம் அமைத்தால் கால்வாயின் இருபுறமும் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, பறவைகள் அழிந்து விடும். விவசாய பணிகளில் தொய்வு ஏற்படும்.
எனவே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை எண் 276-ஐ உடனடியாக ரத்து செய்ய கோரியும், கால்வாயை முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்பவானி பாசன கடைமடை பகுதியான முத்தூர் - மங்கலப்பட்டி, பூமாண்டன்வலசு கிராமங்களில் விவசாயிகள் பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஏராளமான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.
- பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும்.
- பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும்.
காங்கயம் :
கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் - முத்தூர் சாலையில் உள்ள லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வெள்ளியம்பாளையம் குழந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்பவானி பெயரல்ல- எங்கள் உயிர், கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் தோல்வி கண்ட கான்கிரீட் திட்டத்தை கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புகுத்த கூடாது, கீழ்பவானி பாசன மண் கால்வாய் மழைநீர் அறுவடை திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்ட திட்டம் ஆகும்.
இதனால் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இந்த திட்டங்கள் பாழ் பட்டு போகும். மேலும் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும். இதன்படி பழைய பாசனங்களுக்கு 8 டி.எம்.சி.தண்ணீரும், கீழ்பவானி பாசனத்திற்கு 28 டி.எம்.சி. தண்ணீரும் என ஒரே விகிதாச்சார அடிப்படையில் நீர் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். மேலும் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்தாலும், கூடினாலும் இதே விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கோடை சாகுபடி மற்றும் குறுவை பருவத்திற்கும் தண்ணீர் திறக்க கூடாது. நஞ்சை சம்பா சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
- 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட ராணி தோட்டம் தடி டிப்போ 5-வது குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது முக்கடல் அணை மைனஸ் நிலைக்கு சென்று விட்டது.
எனவே பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அதனை ஏற்ற அவர், மறுநாளே தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை பிறப்பித்தார். 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார். அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நாளை நான் (மேயர்) அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். முக்கடல் அணைக்கு தண்ணீர் வந்ததும், குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு அதன்பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்ப டும்.
மேலும் ஆழ்துளை கிணறுகள் தூர்வாரப்பட் டுள்ளன. பழுதடைந்த மோட்டார்கள் சரி பார்க் கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்கும் அம்ரூத் திட்டம் மே 31-ந் தேதிக்குள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம். இது தொடர்பாக பொதுப் பணித்துறை, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி உள்ளோம். அவர்களிடம் மே 31-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்தப் பணி முடிவ டைந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்ற நிலை ஏற்படும். ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்படும்.
முக்கடலுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர் செல்வகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், வேல்முருகன், மாநகர சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், அகஸ்தீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.
- கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன.
காங்கயம் :
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன. மண்ணாலான இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு 70 ஆண்டுகளாகின்றன.எனவே வாய்க்கால் கரைகள் பலவீனமடைந்து அதிக நீர் வீணாவதாக கூறி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் சீரமைப்பு திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டனர்.
மண்ணாலான வாய்க்காலில் கான்கிரீட் கரை, தளம் அமைக்காவிட்டால் வாய்க்காலின் தன்மை கேள்விக்குறியாகும் என பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினர் , ஒரு பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் கான்கிரீட் தளம், கரை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காது. கான்கிரீட் தளம் கரைக்காக மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் என கூறுகின்றனர்.
முழு அளவில் நீர் திறந்தும் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. அடிக்கடி கரைகள் உடைப்பு எடுப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை எனக்கூறி, கான்கிரீட் திட்டப்பணியை துவங்க நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையுடன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்காக அ.தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யாவிட்டால், வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் முத்துச்சாமியிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.விவசாயிகள் கூறுகையில், மண் கரையை மண்ணாகவே உயர்த்துவதில், எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை காக்க தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து முதல்வர் அரசு தலைமை செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.
- பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
- இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையாகும். இந்த அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதியும் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுக்க கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் அணையை சீரமைக்க 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்க ப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அணை பகுதியில் கான்கிரீட் தளம் போட ப்பட்டதால் உயிர் பலி தடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தைரி யமாக அணையில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணை க்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமை யாக வெளியேற்றப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அணை பகுதியில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொடிவேரி அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் துண்டுகளும், கம்பிகளும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிக்க முடியாத நிலையில் அணையின் ஒரு ஓரமாக குளித்து வரு கின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் மழை வெள்ளத்திலேயே அடித்து செல்லப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கானகிரீட் தளம் மற்றும் சேதமான பகுதிகளை நவீன எந்திரங்கள் மூலம் பொது ப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வரு கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதில் விரைவில் அப்பகுதியில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்