என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில்களில் கொள்ளை"
- சாமி நகைகள், கிரீடம் பறிமுதல்
- வாடகை வீட்டில் தங்கி கைவரிசை
வேலூர்:
வேலூர் செல்லியம்மன் கோவில், பள்ளிகொண்டா நாகாத்தம்மன் கோவில், சாத்துமதுரை முருகன் கோவில்களில் சாமி நகைகள், கிரீடம் கொள்ளை போனது.
மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நகை பணம் கொள்ளை போனது. பல்வேறு கோவில்களில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.
திருட்டு கும்பலைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பள்ளிகொண்டா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வேலூர் செல்லியம்மன், சாத்துமதுரை, பள்ளிகொண்டா கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து வேலூர் மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட 4½ கிலோ வெள்ளி உள்ளிட்ட நகைகள், சாமி கிரீடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்த கும்பல் அ.கட்டுப்படி கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை கும்பலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.
- பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சமந்தகோட்டை கிராமத்தில் மத்தூரம்மா கோவில் உள்ளது. கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கப்பா என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடித்துவிட்டு கோயிலை போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார்,
நேற்று காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோயில் கதவின் பூட்டை உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் பெரியவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பூசாரி ரங்கப்பா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் திருடிசென்றனர்.
இது குறித்து பூசாரி மாரப்பா அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே ஒரே நாள் இரவில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது .அதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில ஈடுபட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
- கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைத்து திருட முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15 -ந் தேதி மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு ஸ்ரீ நாகம்மாள் கோவில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில், சப் ஜெயில் ரோடு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் கடலூர் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் , ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கும்தாமேடு தரைப்பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் கடலூரில் 4 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரிய வந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் சேர்ந்தவர் சக்தி (வயது 19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் . இந்த நிலையில் சக்தி என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் ரவிச்சந்திரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்