என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுத் தேர்வு"
- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை நம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து, வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் படித்துவிட்டு, முதலில் எளிதான கேள்விகளுடன் தொடங்கவும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பல சமயங்களில் ஒரு மனதைக் கொண்டு வரும்.
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.
குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.
இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
- மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
- வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தென்காசி:
பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
- ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
- இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகளில் பயிலும் 10,167 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 118 பள்ளிகளில் பயிலும் 14,245 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 24,412 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 48, ஓசூரில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உள்ள மேஜைகள் மீது மாணவர்களின் பதிவு எண்ணை எழுதும் பணியில் ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவ, மாணவிகள் 36 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 12,272 மாணவ, மாணவிகள் 51 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
- செப்டம்பர் 26ம் தேதியில் தொடங்கி 30-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது.
- காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்