search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல் வழக்கு"

    • செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்.
    • கைதானவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம்கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் கூட்டாளிகளான விஷ்வா, மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர்.
    • இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணிக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசினார். அப்போது அவர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து எச்சரிக்கையான காவல்துறையினர், சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் சென்று, அணையின் மதகு, வலதுகரை, இடதுகரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 57) என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், மகாலிங்கத்தை ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ×