search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி பட்ஜெட்"

    • மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.
    • ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது.

    கூட்டத்தொடரை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நேற்று 2-வது நாளாக புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.

    இன்று 3-வது நாள் சட்டசபை காலை 9 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்து 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து 9.05 மணிக்கு பேச தொடங்கினார்.

    பிரதமராக மோடி 3-வது முறையாக தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் தலைமையின் கீழ் எதிர்வரும் ஆண்டுகளில் விக்சித்பாரத் 2047 திட்டம் முழுமையாக நிறைவடையும் என உறுதியாக நம்புகிறேன். அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்தது.

    இதற்காக ஓய்வின்றி பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்களுக்கு பாராட்டுகள். ஏழை எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக மொத்த உற்பத்தி குறியீடு, தனி நபர் வருமானம் நிலையாகவும், சீராகவும் வளர்ந்து வருகிறது.

    கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்வதன் முக்கியத்தவத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    2024-25ம் ஆண்டின் பட்ஜெட் ரூ.12 ஆயிரத்து 700 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6 ஆயிரத்து 914.66 கோடி அரசின் சொந்த வருவாய். பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3 ஆயிரத்து 268.98கோடி. மத்திய சாலை நிதி ரூ.20 கோடி மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.

    நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2 ஆயிரத்து 66 கோடியே 36 லட்சம் கடன்தொகையாக திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரத்து 969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காககவும், ரூ.ஆயிரத்து 730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை போல இந்த நிதியாண்டிலும் அனைத்து துறைகளுக்குமான சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 442.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கு ரூ.ஆயிரத்து 403.46 கோடியும், இளைஞர்களுக்கு ரூ.516.81 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ.521.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 574 கோடி சம்பளத்துக்கும், ரூ.ஆயிரத்து 388 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.ஆயிரத்து 817 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2 ஆயிரத்து 509 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, கியாஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.ஆயிரத்து 900 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.ஆயிரத்து 82 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குடிமை பொருள் வழங்கும் துறையின் கீழ் இலவச அரிசியுடன் மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.
    • 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    சட்டசபையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    நினைவுகூரத்தக்க இத்தருணத்தில் அவை உறுப்பினர்களுக்கும், புதுவை மக்களுக்கும் என் அன்பான வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்து வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15-வது சட்ட சபையின் 5-வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியான முறையிலும் நடந்ததை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

    தேர்தலை சீராக நடத்தியதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் துறைக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இத்தருணத்தில் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறிப்பாக காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதுமின்றி தேர்தல் நடைபெற்றது. இதற்காக காவல் துறை பாராட்டுக்குரியது.

    தொடர்ந்து 3-வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்றமைக்காக நரேந்திர மோடிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள் போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

    2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் சுமார் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.

    ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர் நலனுக்கு முன்னுரிமை அளித்தும், சாலைகள், குடிநீர் வழங்கல், துப்புரவு, மின்விசை, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    நலத்திட்டங்கள் நலிவுற்ற மக்களிடம் விரைவாக சென்றடையும் பொருட்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நேரடி போட்டி தேர்வுகள் மூலம் இந்த அரசு நிரப்பி வருகிறது. அதனடிப்படையில் கடந்த நிதி ஆண்டில் நேரடி போட்டி தேர்வு மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள 1,119 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச் சகத்தின் பாராளுமன்ற குழு புதுச்சேரி அரசு துறைகளின் செயல்பாடுகளை பாராட்டியும், நிர்வாக செயல்பாடுகளில் முழு திருப்தியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சி பரப்பின் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால், அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

    இருப்பினும் ஏழைகளின் நலனுக்காக தேவையான நிதியை வழங்குவதை அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.12 ஆயிரத்து 250 கோடியில் ரூ.11 ஆயிரத்து 464 கோடி அதாவது 93.58 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முந்தைய ஆண்டு செலவினத்தோடு ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகமாகும்.

    மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் நிதி குறியீடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி திகழ்கிறது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48 ஆயிரத்து 52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7.54 சதவீதம் கூடுதலாகும்.

    புதுவையின் தனிநபர் வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 469-லிருந்து 2023-24ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. இது 7.61 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.

    இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.

    தொடர்ந்து கடந்த ஆண்டில் பல்வேறு துறைகளின் கீழ் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், சாதனைகளை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

    • தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர்.
    • கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கார் மூலம் புதுச்சேரி சட்ட சபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலாளர் தயாளன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். சட்ட சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தவுடன், காலை 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    கவர்னர் தனது உரையை தொடங்க முயன்றபோது, எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், செந்தில் குமார், சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் எழுந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கவில்லை.


    இந்த நிலையில் கவர்னர் உரையில் எந்த மக்கள் நலத்திட்டமும் இருக்காது என குற்றம்சாட்டி விமர்சித்து பேசினர்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் என வைத்துக்கொண்டாலும், நான் என்ன சொல்லப் போகிறேன் என முழுமையாக கேட்டுக்கொண்டு, அதற்கு பின் பதில் வைத்தால் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். தயவு செய்து அமர்ந்து என்ன உரையாற்றப் போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை ஆளும் கட்சி திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் அற்புதமான சிந்தனை இருந்தால் அதையும் எடுத்து வையுங்கள். அதை ஆளும் கட்சி எடுத்துக் கொள்ளட்டும். தயவு செய்து அமருங்கள், நான் எனது உரையை தொடங்குகிறேன் எனக்கூறி உரையாற்ற தொடங்கினார்.

    இதையேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர். சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கவர்னர் உரையை அமைதியாக கேட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறினர்.

    தொடர்ந்து 9.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
    • ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    நாளை 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, வருகிற 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை கூட்டத் தொடரில் வழக்கம் போல், மாநில அந்தஸ்து, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ரேசன் கடை திறக்காதது குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

    இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    மேலும், தங்களுக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவி கேட்டும் போர்க்கொடி உயர்த்தினர்.

    டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி, பாஜக தலைவர்களை சந்தித்து பாஜக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    அதிருப்தி எம்.எல். ஏ.,க்களின் பிரச்சனை பாஜகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும், என்.ஆர்.காங்.,-பாஜக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரியின் சமாதான பேச்சுகளை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை. மேலிட பொறுப்பாளரை சந்திக்காமலும் அதிருப்தி எம்எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    சட்டசபை கூட்ட தொடரில் எதிர்கட்சியினர் போல, ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    சமாதானப்படுத்த வந்த பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசிய போது, கூட்டணி அரசை கண்டித்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி வரிசையில் அமர விரும்பினால், அமர்ந்து கொள்ளட்டும் என தெரிவித்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதையொட்டி தலைமை செயலாளர் சரத் சவுகான் அரசு செயலாளர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற கூட்ட விவாதங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள் சட்டசபை வளாகத்தில் இருக்க வேண்டும். அமைச்சர்கள் பதில் அளிக்க தேவையான பதில்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். எதிர்மறையான விவாதங்களின்போது தேவையான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் செய்து அமைச்சர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    கேள்வி நேரங்களின் போது விவாதிக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கான பதில்களை 48 மணி நேரத்துக்கு முன்பாகவே வழங்க வேண்டும். கேள்விகளை தள்ளி வைக்க வேண்டும் என்றாலும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும்.

    தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர், அமைச்சரின் அனுமதியை பெற்று சட்டசபை செயலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பூஜ்யநேரம் முடியும்வரை அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். முக்கியமான விவரங்கள் தொடர்பாக துறை செயலாளர்கள் தலைமை செயலாளருக்கு விளக்கமான குறிப்பு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

    ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

    15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்.
    • கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.

    புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022- 23க்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ×