search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் திருட்டு"

    • மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.‌
    • மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி மங்களம் நகரை சேர்ந்தவர் பெலிப்ஸ் பெர்னாண்டஸ் (வயது 28).

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த பெலிப்ஸ் பெர்னாண்டஸ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    இது குறித்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பள்ளி கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தலைமை ஆசிரியை சசிரேகா திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் தொடக்கப் பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி ஆவணங்களை அருகில் உள்ள மார்க்கெட் லேன் அரசு தொடக்கப்பள்ளியில் அலுவலக உதவியாளர் பள்ளி அறையில் பதிவேடுகள் சான்றிதழ்கள் சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை வைத்து பூட்டி விட்டு சென்றார்.

    நேற்று பள்ளி கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். தலைமை ஆசிரியை சசிரேகா சென்று பார்த்த போது பதிவேடுகள், சான்றிதழ்கள், விளையாட்டு பொருட்கள், கற்றல், உபகரண பெட்டிகள், சத்துணவு பொருட்கள் போன்ற பொருட்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து தலைமை ஆசிரியை சசிரேகா திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    • இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
    • மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.

    மின்சார வயர் துண்டிப்பு

    நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.

    இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.

    கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    அதிர்ச்சி

    வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் அங்கு உள்ள காம்ப்ளக்ஸ்சில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்ட பொட்டலங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதேபோல் பேக்கரியின் மேல் பகுதியில் கணேசன் (45) என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அங்கும் பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ( வயது 44). இவர் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் சாலையில் காஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் லாரி ஆபீஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி இவரது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக நேற்று கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் கடைகளில் பொருட்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுனத்தில் பொருட்கள் திருடுபோனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீளமேடு,

    கோவை ராமானுஜ நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 39). இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடித்து விட்டு நிறுவனத்தை பூட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் காப்பர் வயர், ட்ரில்லிங் எந்திரம் மற்றும் கிரைண்டர் உள்பட பல பொருட்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.20, அயிரம் ஆகும்.

    மறுநாள் காலை வழக்கம்போல பணிக்கு வந்தபோது நிறுனத்தில் பொருட்கள் திருடுபோய் இருந்ததை கண்டு வசந்த் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை கோவிலுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. மேலும் கோவில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோயி ருந்தது.
    • கண்காணிப்பு காமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள சில்வார்பட்டியில் நெல்லையப்பர், காந்திமதியம்மன், சாஸ்தா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா நடந்து முடிந்தது.

    கோவில் பூசாரியாக பிச்சைமணி என்பவர் இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கமான பூஜை களை முடித்து விட்டு கோவிலை அடைத்து சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. மேலும் கோவில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோயி ருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    கோவிலில் உண்டியல் மற்றும் பூஜைப்பொருட்கள் திருடுபோன சம்பவம் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் கோவிலுக்குள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    ×